

46,650 மெட்ரிக் டன் LPGயுடன், கிரீன் சன்வி (Green Sanvi) என்ற இந்திய கொடியிடப்பட்ட கப்பல் நேற்று இரவு ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்தது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானின் லராக் மற்றும் கெஷ்ம் தீவுகளுக்கு இடையே உள்ள மாற்றுப்பாதையில் இந்தக் கப்பல் பாதுகாப்பாக வந்தது. இது ஈரான் போருக்குப் பின் இப்பகுதியைக் கடக்கும் 7வது இந்திய கப்பலாகும்.
இன்னும் 17 இந்தியக் கப்பல்கள் பெர்ஷியன் வளைகுடாப் பகுதியில் உள்ளன. இந்தியக் கப்பல்கள் தங்களுடைய அடையாளம் மற்றும் தேசியத்தை முன்கூட்டியே தெரிவித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தின் காரணமாக பாதுகாப்பாக பயணிக்கின்றன. இதைத் தொடர்ந்து மேலும் இரு இந்திய LPG கப்பல்களான கிரீன் ஆஷா(Green Asha) மற்றும் ஜாக் விக்ரம்(Jag Vikram) ஆகியவை ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வர உள்ளது.