தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவின் பின்னணி!

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவின் பின்னணி!
Published on

மிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக 2021ம் ஆண்டு, மே மாதம் முதல் பதவியில் இருந்து வந்த வெ.இறையன்பு, 60 வயது நிறைவடைந்து விட்டதைத் தொடர்ந்து, நாளையுடன் ஓய்வு பெற இருக்கிறார். இதையடுத்து, தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் 49வது புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இவர் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் வரை இந்தப் பதவியில் இருப்பார்.

ஏற்கெனவே நகராட்சி நிர்வாகம், நீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தை தனது பூர்வீகமாகக் கொண்ட இவர், 1989ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார். காஞ்சிபுரம் உதவி கலெக்டராகப் பயிற்சிப் பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனாவுக்கு ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும்.

இவர் கோவில்பட்டி உதவி கலெக்டர், வேலூர் கூடுதல் கலெக்டர், மாவட்ட கலெக்டர் என பொறுப்புகள் வகித்து வந்தார். கடந்த பத்து ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா ஜூலை 1ம் தேதி முதல் பொறுப்பேற்க இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com