பசிபிக் பெருங்கடலில் உள்ள பழங்கால ஆழ்கடல் எரிமலை பற்றிய அதிர்ச்சி தகவல்!

பசிபிக் பெருங்கடலில் உள்ள பழங்கால ஆழ்கடல் எரிமலை பற்றிய அதிர்ச்சி தகவல்!
Published on

கனடாவின் பசிபிக் பெருங்கடலில் ஆராய்ச்சியாளர்கள் குழு பழங்கால ஆழ்கடல் எரிமலை ஒன்றில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தனர் அப்போது அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் அந்த ஆழ்கடல் எரிமலை தற்போது செயல்பாட்டில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆழ்கடல் எரிமலை 1100 மீட்டர் உயரம் இருப்பதாகவும் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பிற்கு அடியில் கிட்டத்தட்ட 1.5 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த எரிமலைக்கு NEPDEP 58 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எரிமலை அழிந்துவிட்டதாகவும், நீர் குளிர்ச்சியாக இருப்பதாகவும் அவர்களின் ஆரம்ப நம்பிக்கைக்கு மாறாக, அது செயல்பாட்டில் இருப்பதையும், ஏராளமான ராட்சத முட்டைகளால் மூடப்பட்டிருப்பதும் அவர்களுக்குத் தெரியவந்தது. கடலுக்கடியில் உள்ள ஆழ்கடல் எரிமலை வெதுவெதுப்பான நீரை வெளியேற்றி வருகிறது என்றும் கண்டறிந்தனர்.

ஆழ்கடல் எரிமலையால் வெளியேற்றப்படும் நீரானது தாதுக்கள் நிறைந்திருப்பதாகவும், ஆழ்கடல் உயிரினங்கள் செழித்து வளர ஒரு வசதியான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் அப்பகுதியில் ஒரு பசிபிக் வெள்ளை ஸ்கேட் (Pacific white skate) முட்டையிடுவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். பசிபிக் ஒயிட் ஸ்கேட் முட்டையிடும் காட்சிகளைக் கைப்பற்றியதன் மூலம் ஆராய்ச்சி குழு மற்றொரு சாதனை படைத்துள்ளது. ஸ்கேட்கள் தங்கள் முட்டைகளை அடைகாக்க எரிமலை வெப்பத்தைப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த பயணத்திற்கு தலைமை தாங்கி வரும் ஆழ்கடல் உயிரியலாளர் Dr.Cherisse Du Preez, "ஆழ்கடல் எரிமலை செயல்பாடுடன் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தோம். எரிமலை அமைந்திருக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான பசிபிக் வெள்ளை ஸ்கேட் முட்டைகளைக் கொண்ட நர்சரி பகுதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. "இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று டு ப்ரீஸ் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com