உளுந்தூர்பேட்டையில் காலணி தொழிற்சாலை; 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு!

உளுந்தூர்பேட்டையில் காலணி தொழிற்சாலை; 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு!
Published on

ளுந்தூர்பேட்டையை அடுத்துள்ளது ஆசனூர் சிட்கோ வளாகம். இந்த சிட்கோ பகுதியில் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 2,300 கோடி ரூபாய் முதலீட்டில் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகளைத் தயாரிக்கும் தொழிற்சலை ஒன்றை அமைக்க முன்வந்துள்ளது. தடகளப் போட்டி வீரர்களுக்கு காலணிகளைத் தயாரிக்கும் தைவானைச் சேர்ந்த இந்த 'போ சென்' முன்னணி நிறுவனம் சீனா, வியட்நாம், இந்தோனேசியா, கொலம்பியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தடகள வீரர்களுக்கான பிரத்யேக ஷூக்களை தயார் செய்து அதை உலகம் முழுவதும் சந்தைப்படுத்தி வருகிறது.

இந்த நிறுவனம் தற்போது இந்தியாவிலும் கால்பதிக்க முயன்று, பல்வேறு மாநிலங்களில் காலணி தொழிற்சாலைகளை உருவாக்க இடம் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் ஆசனூரில் உள்ள சிட்கோ வளாகத்தில் தனது இந்த ஆலையை நிறுவ முன்வந்துள்ளது. இதன் மூலம் இந்த மாவட்டத்தில் உள்ள 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதிலும் சுமார் 78 சதவீதம் வரையில் பெண்களே இதில் பணியமர்த்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்தக் காலணி தொழிற்சாலையை அமைப்பதற்கான தமிழ்நாடு அரசுடன் தைவான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. முதலமைச்சர் அறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தைவான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com