தாய்லாந்தில் கொடூரம்
தாய்லாந்தில் கொடூரம்

பச்சிளம் குழந்தைகள் மீது துப்பாக்கி சூடு! தாய்லாந்தில் கொடூரம்!

Published on

தாய்லாந்தில் குழந்தைகள் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தது அந்நாட்டில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

துப்பாக்கிச்சூட்டின் போது, அங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்துள்ளனர். ஆசிரியை உள்ளிட்ட சில ஊழியர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த பட்டது.. அதில் உயிரிழந்த ஆசிரியை 8 மாத கர்ப்பிணி என்பது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் சிலருக்கு 2 வயதுக்கு குறைவே உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தைகள் துப்பாக்கி சூடு
குழந்தைகள் துப்பாக்கி சூடு

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது முன்னாள் போலீஸ்காரர் ஓருவர் என தெரியவந்துள்ளது. அவர் கடந்தாண்டு தான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் உயிரிழந்தது, அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com