150 நாட்களில் இரண்டு பாகங்களை எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல - ஜெயம் ரவி!

PS 2 சென்னை பிரஸ் மீட் ....!
150 நாட்களில் இரண்டு பாகங்களை எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல -  ஜெயம் ரவி!
Published on

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதிதிரைக்கு வர உள்ளது. கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம்ரவியும் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ்இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இன்று ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஜெயம் ரவி பேசுகையில், “படத்தின் மீது எங்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. 150 நாட்கள் இரண்டு பாகங்களை எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அது மணிரத்னத்தால் நிகழ்ந்தது. கடுமையாக உழைத்துள்ளோம். படத்தை கடந்த உணர்வைக் கொடுத்தது ‘பொன்னியின் செல்வன்’. கார்த்தி படம் திரையரங்குகளில் வரும்போது விசில் அடித்து பார்க்க வேண்டும் ஆசைப்படுபவர்களில் நானும் ஒருவன். அவர் என்னுடைய ‘சோல்மேட்’. படம் நிச்சயம் பெரும் வெற்றியடையும்” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, “ பொன்னியின் செல்வன் படத்திற்கு இவ்வளவு ஆதரவு கொடுத்தற்கு முதலில் நன்றி. படத்தில் மணி சாரின் பூங்குழலியாக இந்த வாழ்க்கையை வாழ்வதில் மிகவும் பெருமையாக உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் நானும் ஒரு பங்காக இருந்திருக்கிறேன் என்பதில் எனக்கு மிக மிக பெருமை. இந்த திரைப்படத்தில் நடித்த கலைஞர்களுடன் பயணித்தது எனக்கு மிகவும் சுகமான அனுபவம். இனி எப்போது இது போன்ற வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.

படப்பிடிப்பில் ஏதாவது டென்ஷனான தருணம் வரும் போதெல்லாம் ஜெயம் ரவி அதனை நகைச்சுவையாக மாற்றிவிடுவார். நானும் ஷோபிதாவும் ஒரே தோனியில் பயணித்தோம். அவர் திறமை மிகப்பெரியது. த்ரிஷாவிடம் நான் எப்போதும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். இப்படி பட்ட ஒரு வாய்ப்பை கொடுத்த மணிரத்னம் சாருக்கும், இந்த படத்தில் நடித்த கலைஞர்களோடு ஒன்றாக பழக வைத்து அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வைத்ததிற்கும் நன்றி” என்று சொன்னார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com