ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு?!

Jipmer
Jipmer

புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற ஜிப்மர் மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு எழுந்துள்ளதாக கூறப்படுவதை அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மறுத்துள்ளார்.

-இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என புகார்கள் வந்ததையடுத்து அரசு ஆலோசனை நடத்தினோம். மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. 

கடந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஜிப்மரில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். மேலும் புற நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. ஜிப்மரில்  மருந்து இல்லை என்று வேறு இடங்களில் வாங்கிக் கொள்ளும்படி மருந்து சீட்டு எழுதி கொடுக்கக் கூடாது என ஜிப்மர் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். 

 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முழுமையாக மருந்துகள் இலவசமாக வழங்க வேண்டுமென அறிவுறுத்தப் பட்டுள்ளது. பிரதமரின் காப்பீடுத் திட்டத்தில் புதுச்சேரியை சார்ந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றுள்ளனர். ஜிப்மரில் 50 கோடியில் புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com