தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - 8 லட்சம் தடுப்பூசிகள் டெல்லியிலிருந்து வந்தாக வேண்டும்.

தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு -   8 லட்சம் தடுப்பூசிகள் டெல்லியிலிருந்து வந்தாக வேண்டும்.

டந்த இரண்டு மாதங்களாகவே தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சொல்லப்படுகிறது. ஓராண்டாகவே தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் குறைந்த வந்த காரணத்தால் கையிருப்பும் குறைவாகவே இருந்து வந்தது.  ஏப்ரல் மாதம் முதல் கைவசமுள்ள அனைத்து தடுப்பூசிகள் அனைத்தும் தீர்ந்துபோன நிலையில் தமிழக அரசு, மத்திய சுகாதாரத்துறையை நாடியிருக்கிறது.

இரண்டு ஆண்டுகளாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயங்கியவர்கள்,  தற்போதுதான் முன் வந்திருக்கிறார்கள்.  ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்வதற்காக தடுப்பூசியை தேடி வருகிறார்கள். தமிழக அரசின் சுகாதார மையங்களில் தடுப்பூசி கையிருப்பில் இல்லை. பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் மட்டுமே கிடைத்து வருகிறது. அதற்கு 385 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஏப்ரல் மாத இறுதியில் கோவி ஷீல்டு, கோவாக்ஸின், கோர்பெவேக்ஸ் தடுப்பூசிகள் முற்றிலுமாக தீர்ந்து விட்டன. ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கூடுதல் தடுப்பூசி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. இரண்டு மாதமாக இது குறித்து ஆட்சியாளர்கள் ஏன் கவலைப்படவேயில்லை என்கிற கேள்வி எழுகிறது.

முதல் முறையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், இரண்டாவது தடுப்பூசி தேடி கடந்த இரண்டு மாதங்களாக சுகாதார மையங்களை அணுகி வருகிறார்கள்.  இன்றைய நிலையில் 5 லட்சம் கோவிஷீல்டு, 50 ஆயிரம் கோவாக்ஸின், 75 ஆயிரம் கோர்பெவேக்ஸ் வகையிலான தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. குறைந்தபட்சம் 6.25 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. எப்போது கிடைக்கும் என்கிற உத்திரவாதம் எதுவும் இதுவரை மத்திய அரசிடமிருந்து பெறப்படவில்லை என்கிறார்கள்.

பூஸ்டர் தடுப்பூசி அவசியம் போட்டாக வேண்டும் என்று மக்களை பல நாடுகள் வலியுறுத்துவதில்லை. இதன் காரணமாக பூஸ்டர் தடுப்பூசியின் உற்பத்தியும் குறைந்துவிட்டது. ஏதாவது ஒரிருவர்தான் தேடி வந்து பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இவர்களில் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்பவர்களாக இருப்பவர்கள்தான் தடுப்பூசியை தேடி வருகிறார்கள்.

தடுப்பூசி அவசியம் போட்டாக வேண்டும் என்று இதுவரை வந்து கொண்டிருந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்தும் 2023ல் நிறுத்தப்பட்டுவிட்டன. தடுப்பூசி விநியோகத்தையும் நிறுத்தாமல் இருந்தால் சரி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com