கூடலூர் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு !

கூடலூர் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு !

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசே மதுபானங்களை விற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளில் சில நேரங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட தொகை வைக்கப் பட்டிருக்கும்.

அதை கொள்ளையடிக்கவும் முக்கியமாக மது பாட்டில்களை கொள்ளையடிக்கவும் அவ்வப்போது டாஸ்மாக் கடைகளை கொள்ளையர்கள் குறி வைக்கிறார்கள்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கொள்ளையர்கள் காவலர்களை கத்தியால் வெட்டியதால் போலீசார் சுட்டு பிடிக்க முயற்சித்தனர்.

நீலகிரி மாவட்டம் குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்ற கொள்ளையன் மணி துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார். கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் .காயமடைந்த மணி சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தப்பிய மற்றொரு கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் மதுபானங்களை திருடுவதை சாம்பார் மணி வழக்கமாகக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் தற்போது அவர் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுடப்பட்ட கொள்ளையன் சாம்பார் மணிக்கு தொடையில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிகாலை நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com