செந்தில் பாலாஜி கைதை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டியது தானே? அ.தி.மு.க ஜெயக்குமார்!

செந்தில் பாலாஜி கைதை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டியது தானே? அ.தி.மு.க ஜெயக்குமார்!
Published on

அமைச்சர் செந்தில் பாலாஜ் நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான அமலாக்கத்துறை விசாரணையின் போது, நேற்று இரவு 1 மணி அளவில் அவருக்கு மூச்சுத் திணறலுடன் கூடிய நெஞ்சு வலி வந்ததாகாக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து:

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடிப்பிசைத் திலகம் என்று பட்டமே கொடுக்கலாம். நேற்று வரை வாக்கிங் சென்று கொண்டிருந்தவருக்கு திடீரென்று எப்படி நெஞ்சு வலி வரும்? அமலாக்கத்துறை வந்தால் உடனே நெஞ்சு வலி வந்து விடுமா?

அவரை எதற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்? இன்று யாருடைய ஆட்சி நடைபெற்று வருகிறது? ஸ்டாலின் ஆட்சி. அவர்கள் என்ன சொல்வார்கள்?செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியாகும் வரை மேற்கொண்டு சிகிச்சை தொடர வேண்டும் என்பார்கள். அதனால் அமலாக்கத்துறை இவரை AIMS மருத்துவமனைக்கு கொண்டு சென்று பூரணமாகப் பரிசோதித்து அவரது உடல்நலன் குறித்து தெரிவித்து உடனடியாக சட்ட நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.

காவல்துறையினரை அமைச்சர் எட்டி உதைத்திருக்கிறார். நெஞ்சு வலி இருக்கும் நபர் எப்படி எட்டி உதைக்க முடியும்? நெஞ்சு வலி இருந்தால் கடமையைச் செய்து கொண்டிருக்கும் காவல்துறையை எப்படி எட்டி உதைக்க முடியும்? அப்படி காவல்துறையை எட்டி உதைக்கும் போது ஆக்டிவ்வாக இருந்து விட்டு கஸ்டடியில் எடுக்கும் போத் மட்டும் நெஞ்சு வலி என்றால் எப்படி? அவருக்குநெஞ்சு வலி வந்த போது உடனிருந்த நாகராஜ் முன்பு அதிமுகவில் இருந்தவர். அவருக்கு மருத்துவம் தெரியாது. அவர் அமைச்சருக்கு நெஞ்சு வலி என்றதும் நெஞ்சுப்பகுதியில் ‘பம்ப்’ பண்ண முயற்சி செய்கிறார். அதை ஒரு மருத்துவர் அல்லவா செய்ய வேண்டும்? இவர் ஏன் செய்கிறார்? எக்ஸ்பர்ட்டுகளிடம் கேட்டால் அவர்கள் சொல்வார்கள், இப்படியான விஷயங்களை எல்லாம் எல்லோரும் செய்யக்கூடாது. விவரமில்லாதவர்கள் செய்தால் நெஞ்சு வலி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதுவே பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாகி விடும் என்று! அனைத்து உண்மைகளையும் அறிந்தவர் எனும் பட்சத்தில் இவர்கள் செந்தில் பாலாஜியை எந்த வகையில் டீல் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்குநீங்கள் தான் விடை காண வேண்டும்

- என்று செய்தியாளர்களைப் பார்த்துக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் பேசுகையில்;

செந்தில் பாலாஜி கைதுக்கு ஏன் அரசியல் சாயம் பூச வேண்டும்? சட்டப்படி எதிர்கொள்ள வேண்டியது தானே? இந்தக் கைது நடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் என்பது கிடையாது. சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை முதலமைச்சர் நேரில் சென்று பார்க்கலாமா?

கடந்த முறை அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை நுழைந்து சோதனை நடத்திய போது ஸ்டாலின் என்ன விதமான கேள்விகளை எல்லாம் எழுப்பி இருக்கிறார் என்று பாருங்கள், என முந்தைய அதிமுக ஆட்சியின் போது ஸ்டாலின் பேசிய வீடியோவை செய்தியாளர்களுக்கு ஆதாரமாகக் காட்டி ஜெயக்குமார் தனது குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தார்.

அப்போது ஸ்டாலின் கேட்டதைத்தான் இப்போது நாங்களும் ஊடகங்களிடம் கேட்கிறோம்.

உண்மை என்ன என்பதை நீங்கள் தான் அறிந்து சொல்ல வேண்டும். தனக்கு வந்தால் மட்டும் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி என்பதா?! அப்போது தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை என்பது தமிழக அரசுக்குத் தலைகுனிவு என்றார், இப்போது இந்த விடியாத அரசுக்கு தலை நிமிர்ந்து விட்டதா? எப்படிப் பட்ட ஒரு சந்தர்ப்ப வாத பேச்சு இது ?!

-என முன்னாள் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com