மசூதிக்குள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்டது மத உணர்வுகளை புண்படுத்தாது - கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு!

Shouting Jai Shriram inside the mosque
Shouting Jai Shriram inside the mosque
Published on

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள, கடபா தாலுக்கா, ஐத்தூர் கிராமப் பஞ்சாயத்தை சேர்ந்த மர்தாலாவிலுள்ள பத்ரியா ஜும்மா மஸ்ஜித் வளாகத்தில் , "புத்தூர் பிலினேலே கிராமத்தைச் சேர்ந்த கீர்த்தன் மற்றும் மங்களூரு கைகம்பாவைச் சேர்ந்த சச்சின் ஆகியோர்" ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கங்களை எழுப்பியதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி இரவு, மசூதி ஊழியர்கள் கடபா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அந்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் 447 (கிரிமினல் அத்துமீறலுக்கான தண்டனை), 505 (பொது மக்களை துன்புறுத்துவதற்கு வழிவகுக்கும் அறிக்கைகள்), 506 (கிரிமினல் மிரட்டலுக்கான தண்டனை), 34 (பொது நோக்கம்) உள்ளிட்ட பல்வேறு ஐபிசி குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி குற்றம் சாட்டப்பட்ட கீர்த்தன்,சச்சின் ஆகியோர் மாநில உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.

மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான ஒற்றை உறுப்பினர் அமர்வு "ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டால் மத உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாது" என்று கூறி , தட்சிண கன்னடா மாவட்டம் கடபாவில் உள்ள மசூதிக்குள் நுழைந்து முழக்கமிட்ட 2 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்:
News 5 - (16.10.2024) அம்மா உணவகத்தில் இலவச உணவு!
Shouting Jai Shriram inside the mosque

நீதிபதியின் தீர்ப்பில் "புகார்தாரர் கூறியது போல், அந்த பகுதியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்". இருப்பினும், மனுதாரர் மீது ஐபிசி பிரிவு 295 'ஏ' (மத உணர்வு, மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பது) கீழ் புகார் பதிவு செய்யப்பட்டது. ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுவது எப்படி மத உணர்வுகளை புண்படுத்தும் என்று புரியவில்லை. மேலும், வழக்கில் எந்த குற்றமும் கண்டறியப்படவில்லை. எனவே, மனுதாரருக்கு எதிரான அடுத்த நடவடிக்கைகளை அனுமதிப்பது சட்டத்தின் செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதாக அமையும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com