ஸ்ரீரங்கத்து ஆண் தேவதை சுஜாதா நினைவு தினம்!

ஸ்ரீரங்கத்து ஆண் தேவதை சுஜாதா நினைவு தினம்!
Published on

தமிழ் இலக்கியமாகட்டும், ஜனரஞ்சக படைப்புகளாகட்டும் , அறிவியல் புனைவுகளாகட்டும் எழுத்தாளர் சுஜாதா தடமும் தடயமும் பாதிக்காத இடங்களிலில்லை. பெரும் வாசகர் வட்டத்தை கொண்டுள்ள எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாதா என்கிற எஸ்.ரங்கராஜன் சுஜாதா என்ற பெயரிலேயே தனது நூல்களை எழுதியுள்ளார். இவர் 1935 மே 3-ல் சென்னையில் பிறந்தார். தனது சிறுவயதில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தவர். ஸ்ரீரங்கள் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பும் , பின்னர் புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் பட்டம் பெற்றார். இவரும் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவரும், இவரும் இங்கு ஒன்றாக படித்தவர்கள். பின்னர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடியில் மின்னணு பொறியியல் படித்தார்.

டெல்லியில் மத்திய அரசுப்பணியாற்றியவர். 14 ஆண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு, பின்னர் பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப்பிரிவிலும் மற்றும் பல்வேறு பிரிவுகளிலும் பணியாற்றி அந்நிறுவனத்தின் பொது மேலாளர் ஆனார். ஓய்வுக்குப்பின் சென்னையில் வசித்தார்.

இன்றைய தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தார். . சுஜாதா என்றாலே தொழில்நுட்பங்கள் குறித்து அதிகம் எழுதுபவர் என்ற அடையாளமும் உண்டு. அறிவியலை ஊடகம் மூலமாக கொண்டு சென்றதற்காக அவருக்கு 1993ம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்பக்கழகம் விருது வழங்கியது. இவிஎம் இயந்திரத்தை உருவாக்க காரணமாக இருந்ததற்காக, அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.

சுஜாதா தனது அறிவியல் புனைக்கதைகள் மூலம் நன்கு எல்லோராலும் அறியப்பட்டவர். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் மட்டுமல்லாமல் திரைப்படங்களில் வசனம் என பல்வேறு தளங்களில் செயல்பட்டுள்ளார்.

அவரது முதல் கதை 1953ம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் பிரசுரமாகியிருந்தது. அப்போது துவங்கிய எழுத்துப்பணிகள் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை வசனங்கள், கட்டுரைகள், திரைப்பட கதை வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பலவற்றிலும் இன்று வரை உயிர்ப்போடு இருக்கிறது. இவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் மிகவும் புகழ் பெற்ற படைப்பு . அவரது எழுத்துப்பணிக்காக தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்ததும் சிறப்பானது.

தமிழ் இலக்கிய உலகில் பெரும்பணிகளைச் செய்துள்ள இவர் 2008 பிப்ரவரி 27 அன்று மறைந்துவிட்டார். ஆனால் அவர் மறைத்து போனாலும் அவரது நினைவுகள் நம்மை விட்டு நீங்கவில்லை என்பது நிதர்சனம் . அவரது எழுத்துக்கள் இன்றளவும் பெரும் உயிர்ப்போடு இருக்கிறது என்றால் அது மிகையில்லை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com