தேசியப் பூங்காவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய சிறுத்தை சியாயா!

தேசியப் பூங்காவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய சிறுத்தை சியாயா!

நமீபியாவில் இருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு இடம் பெயர்ந்த சிறுத்தை ஒன்று ஆரோக்கியமான நான்கு குட்டிகளை ஈன்றுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பூங்காவில் மற்றொரு பெண் சிறுத்தை இறந்த துக்கமான செய்தியை அடுத்து வந்த மகிழ்ச்சியான செய்தி இது.

புதிதாகப் பிறந்த சிறுத்தை குட்டிகளின் படங்கள் மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ், நாட்டில் சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு குட்டிகள் பிறந்தது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

ட்வீட்களில் பிரதமர் மோடியை டேக் செய்து, யாதவ், “வாழ்த்துக்கள் இந்தியா. அமிர்த காலத்தில் நமது வனவிலங்கு பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு முக்கிய நிகழ்வு! செப்டம்பர் 17, 2022 அன்று, பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியாவிற்கு மாற்றப்பட்ட சிறுத்தைகளில் ஒன்றிற்கு நான்கு குட்டிகள் பிறந்துள்ளன என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ப்ராஜெக்ட் சீட்டாவின் முழுக் குழுவும் சிறுத்தைகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் இடைவிடாத முயற்சிகள் செய்ததற்காகவும், கடந்த காலத்தில் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் தவறைச் சரிசெய்வதில் அவர்கள் எடுத்த முயற்சிகளுக்காகவும் நான் வாழ்த்துகிறேன்.” - என்று ட்வீட் செய்திருந்தார் யாதவ்.

யாதவின் ட்வீட்டை பிரதமர் நரேந்திர மோடி, “அருமையான செய்தி” என்று ரீட்வீட் செய்தார்.

நமீபியாவில் இருந்து எட்டு மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 ஆக மொத்தம் 20 சிறுத்தைகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனே தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.

குட்டிகள் ஐந்து நாட்களுக்கு முன்பு பிறந்ததாக நம்பப்படுகிறது, ஆனால் அவை புதன்கிழமை தான் அதிகாரிகளின் பார்வைக்கு வந்தது என்று மூத்த வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகளில் `சியாயா' எனப்பெயரிடப்பட்ட சிறுத்தையே அவற்றின் தாய் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஷியோபூர் கோட்ட வன அதிகாரி பி கே வர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், “சியாயா நான்கு குட்டிகளை ஈன்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com