மக்கள் சமூக நீதிப் பேரவை நிர்வாகிகள் பெரியாரின் உருவம் பொறித்த செங்கோலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு வழங்க முற்பட்டனர். அப்போது இதனை வாங்க மறுத்த சித்தராமைய்யா அதற்கான விளக்கமும் அளித்தார். அங்கு இந்த நிகழ்வு பரபரப்பினை கிளப்பியது.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.கா்நாடகத்தில் சமூகநீதி ஆட்சியை நிலைநிறுத்த வலியுறுத்தி அவருக்கு பெரியாா் முகம் பொறித்த தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க முயன்றனா்.
மதுரையைச் சார்ந்த மக்கள் சமூக நீதிப் பேரவை நிர்வாகிகள் பெரியாரின் உருவம் பொறித்த செங்கோலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு வழங்க முற்பட்டனர். இந்த செங்கோலில் தங்க முலாம் பூசப்பட்ட பெரியாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
30 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் சமூக நீதிப் பேரவையின் தலைவர் மனோகரன் ஆகியோர் சனிக்கிழமை மாலை பெங்களூரில் கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் சித்தராமையாவை சந்தித்தனர். மேலும் கர்நாடக முதல்வரிடம் பெரியாரின் செங்கோலை வழங்கி ஜனநாயகத்தையும் , சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை சற்றும் எதிா்பாா்க்காத முதல்வா் சித்தராமையா செங்கோலைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டாா்.
இது குறித்து மக்கள் சமூக நீதி பேரவை நிர்வாகிகளிடம் முதல்வர் சித்தராமையா அதற்கான காரணத்தையும் தெரிவித்தார். ‘‘ஜனநாயக மரபுக்கு எதிராக, மன்னர்களின் மரபைப் போற்றும் வகையில் செங்கோல் கலாசாரம் இருக்கிறது. அதனைத் தான் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க சார்பில் பிரதமர் வைத்தார். அதனை அப்போதே காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. இதனால், இந்தச் செங்கோலை நான் வாங்கிக்கொள்ள வாங்க விரும்பவில்லை. எனக்கு பெரியாரின் படமே போதும்’’ என தெரிவித்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது.