சிலிக்கான், தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய மூன்றும் கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராட உதவுகின்றன: புதிய ஆய்வு முடிவு வெளியீடு!

சிலிக்கான், தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய மூன்றும் கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராட உதவுகின்றன: புதிய ஆய்வு முடிவு வெளியீடு!

SARS-CoV-2 வைரஸின் ஸ்பைக் புரதங்கள் சிலிக்கான், தங்கம் மற்றும் தாமிரத்துடன் தொடர்பு கொள்ளும்போது சிக்கிக் கொள்கின்றன, இந்த புரதங்களை அழிக்க மேற்கண்ட மெட்டல் மற்றும் மெட்டலாய்டு தனிமங்களின் மின்சார புலங்களைப் பயன்படுத்தலாம் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தனிமங்கள் வைரஸைக் கொல்ல வாய்ப்பு உள்ளது.

SARS-CoV-2 வைரஸின் ஸ்பைக் புரதமானது மனித உயிரணுக்களுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்த பயன்படுகிறது.

கெமிக்கல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸ்களின் ஸ்பைக் புரோட்டீன்கள் இணைக்கப்பட்டு சில வகையான பரப்புகளில் ஒட்டிக்கொண்டது. "கொரோனா வைரஸ்கள் அவற்றின் சுற்றளவில் ஸ்பைக் புரோட்டீன்களைக் கொண்டுள்ளன, அவை ஹோஸ்ட் செல்களை ஊடுருவி தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன, மேலும் இந்த புரதங்கள் சிலிக்கான், தங்கம் மற்றும் தாமிரத்தின் மேற்பரப்பில் உள்ள ஒரு வலுவான இரசாயனப் பிணைப்பை அறுத்துக் கொண்டு ஊடுருவ இயலாமல் அதில் சிக்குண்டு விடுகின்றன. இவற்றுடனான எதிர்வினையில் அவை அழிந்து விடும் வாய்ப்பும் உண்டு.

என்று ஆஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளரான நாடிம் டார்விஷ் கூறுகிறார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com