சிலிக்கான் வேலி பேங்க்(SVB) திவால்! அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள்!

சிலிக்கான் வேலி பேங்க்(SVB) திவால்! அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள்!
Published on

அமெரிக்காவின் கலிப்போர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிலிக்கான் வேலி பேங்க் (SVB) பங்குகள் 85 சதவீதம் சரிந்தது. இது அந்நாட்டு வங்கி துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நேற்று வெள்ளிக்கிழமை சிலிக்கான் வேலி பேங்க் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் Federal Deposit Insurance Corporation ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கைப்பற்றியது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நெட்பேங்கிங்ல் பேலென்ஸ் தொகை காட்டுவதை நீக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் அமெரிக்க டெபாசிட் இன்ஸுரன்ஸ் கீழ் இவ்வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்கள் இன்சூரன்ஸ் தொகை பெற உள்ளனர்.

சிலிக்கான் வேலி பேங்க் ஸ்டார்ட் அப் மற்றும் வென்சர் கேப்பிடல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதியுதவிகளை அளிக்கும் சேவைகளை செய்து வருகிறது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான முதலீடுகள் பெரிய அளவில் குறைந்த காரணத்தால், ஸ்டாட்ர்அப் நிறுவனங்கள் சிலிக்கான் வேலி பேங்க்-ல் டெப்பாசிட் செய்ய தொகையை திரும்ப பெற துவங்கினார்.சிலிக்கான் வேலி பேங்க் தனது வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையை அடிப்படையாக வைத்து பல பில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரங்களை வாங்கியது. இது பாதுகாப்பான முதலீடுகளாக இருந்தாலும், வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் நீண்ட காலம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவானது, முன்கூட்டியே விற்பனை செய்தால் அதிக இழப்பு ஏற்படும்.

டெபாசிட் தொகையை வெளியேற்றும் அளவு அதிகரித்த போது பத்திரங்களை பணமாக்க முடியாத காரணத்தால் தனது சொந்த முதலீடுகளை விற்பனை செய்து ஈடு செய்து வந்தது. சிலிக்கான் வேலி பேங்க்-ல் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் குறைந்தபட்ச டெபாசிட் தொகையே 250,000 டாலர்.

டெபாசிட் வித்டிராவல் கோரிக்கை அதிகரிக்க துவங்கிய நிலையில் சிலிக்கான் வேலி பேங்க் பத்திரங்களை வேறு வழியே இல்லாமல் நஷ்டத்தில் விற்பனை செய்ய துவங்கியது. இந்த இழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து சொத்துக்களின் இருப்பும் குறைந்து வரும் நிலையில் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com