

இன்று காலை வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.55,000 குறைந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.30,000 குறைந்து, தற்போது ஒரு கிலோ வெள்ளி ₹3,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ₹1,19,200-ஆகவும், ஒரு கிராம் ₹14,900-ஆகவும் நீடிக்கிறது.
கடந்த கால வளர்ச்சி: 2015 முதல் 2025 வரையிலான நீண்ட காலகட்டத்தில் வெள்ளியின் விலை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒரு கிராம் ரூ.100 என்று இருந்த நிலை மாறி, ஒரு கிலோ ரூ.2 லட்சம் என அசாதாரண உயர்வைச் சந்தித்தது. 2026 ஜனவரி மாதத்தில் சில சரிவுகளுக்குப் பின், வரலாறு காணாத உச்சமாக கிலோ ~₹4.25 லட்சம் வரை தொட்டது.
தங்கமும் வெள்ளியும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து வந்த நிலையில், தங்கம் விலையை விட வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட வெள்ளி விலை, தற்போது பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
இன்று காலை 55,000 ரூபாய் குறைந்த நிலையில் பிற்பகல் மேலும் 30,000 ரூபாய் குறைந்து ஒரே நாளில் அதிகம் குறைந்து இதிலும் வித்யாசம் காட்டிவிட்டது வெள்ளி. மிகப்பெரிய இந்த சரிவின் காரணமாக பங்கு-மதிப்பீடு மற்றும் நுகர்பொருள் விலை பாதிப்பு கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளி விலையும் நேற்று கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 405க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மேலும் ரூ. 55 குறைந்து ஒரு கிராம் ரூ. 350க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிலோவுக்கு ரூ. 55,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 3,50,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் வெள்ளி விலை காலையில் ரூ.55 ஆயிரம் குறைந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.30 ஆயிரம் குறைந்துள்ளது.வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.85,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.