ஒரே பதவி, ஒரே ஒய்வூதிய திட்டம் திருத்தியமைப்பு !

ஒரே பதவி, ஒரே ஒய்வூதிய திட்டம் திருத்தியமைப்பு !

முன்னாள் ராணுவத்தினருக்கான ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டத்தை திருத்தியமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் வெள்ளிக்கிழமை (டிச. 23) நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.8.450 கோடி கூடுதல் சுமை ஏற்படும். மேலும் 25,13, 002 பேர் பயனடைவார்கள்.

திருத்தப்பட்ட ஒய்வூதியம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூன் வரையிலான காலத்துக்கு நிலுவைத் தொகையாக ரூ.23,638 கோடி வழங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகுர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கும் இந்த திருத்தப்பட்ட ஒய்வூதியத்தின் பணப்பலன் வழங்கப்படும்.

சராசரிக்கு மேலாக ஓய்வூதியம் பெறுவோரின் நலன்களும் பாதுகாக்கப்படும்.

குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் விதவைகள், மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் இதன் மூலம் பயனடைவார்கள்.

ஓய்வூதிய நிலுவைத் தொகை நான்கு தவணைகளாக வழங்கப்படும். எனினும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், தீரச்செயல் விருதுபெற்றவர்களுக்கு ஒரே தவணையில் இந்த நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி அறிவித்த்து. இதற்கு கட்ஆஃப் தேதியாக 2014 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஓய்வூதியம் திருத்தியமைக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்த்து குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com