சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு!

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது விளாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் பலரும் பட்டாசு தொழிற்சாலைகளில் பணி புரிந்து வருகின்றனர். இன்றும் அவர்கள் வழக்கம்போல் பட்டாசு தொழிற்சாலையில் தரைச் சக்கரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட உராய்வால் தீப்பொறி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தால் அந்தத் தொழிற்சாலையின் ஒரு அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. திடீரென ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் சிலர் சிக்கிக் கொண்டனர். இதில் கருப்பசாமி மற்றும் தங்கவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர்.   

இவர்கள் தவிர, இந்த வெடி விபத்தில் சிக்கிக் கொண்ட கருப்பம்மாள் மற்றும் மாரித்தாய் ஆகிய இரண்டு பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது தீயை அணைத்ததோடு, தொழிற்சாலையின் இடிபாடுகளையும் அகற்றி தொழிலாளர்களை காப்பாற்றினர். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com