சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் தீவிபத்து!

ராஜகோபுரத்தில்  தீவிபத்து
ராஜகோபுரத்தில் தீவிபத்து
Published on

விருது நகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலின் ராஜகோபுரத்தில் திடீரென ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசியில் பராசக்தி காலனியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் 50 ஆண்டுகள் பழமையானது. இக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த 6 மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை இக்கோயிலின் ராஜகோபுரத்தில் தீவிபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்தக் கோவில் வழியாக நேற்று மாலை திருமண நிகழ்சிக்காக சீர் வரிசைகள் கொண்டு செல்லும் பொழுது  பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தீப்பொறி, கோவிலின் ராஜகோபுரத்தின் மீது போர்த்தப் பட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாயில் விழுந்து, மளமள தீப்பிடித்து எரிய தொடங்கியது.

உடனடியாக சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து சிவகாசி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோவிலின் ராஜகோபுரத்தின் மீது தீ விபத்து ஏற்பட்டது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com