மாதம் ரூ.70 ஆயிரம் லாபம்.. தமிழக அரசின் உதவியால் முதலாளியான பெண்!

பெண் தொழில்முனைவோர்
பெண் தொழில்முனைவோர்
Published on

த்தனையோ பெண்கள் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், தனக்கு தெரிந்த தொழிலால் முன்னேறியுள்ள ஒரு பெண்ணின் வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.

சிவகங்கையை சேர்ந்த அஞ்சலை என்ற பெண் சுயதொழில் செய்து அசத்தி வருகிறார். இவரின் இந்த தொழிலுக்கு தமிழக அரசே உதவி செய்து கைதூக்கி விட்டுள்ளது.

சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அஞ்சலை என்ற பெண்ணுக்கு பொருளாதார வசதி இல்லாததால், அவரின் கனவு நினைவாகாமல் போய்விடுமோ என அச்சத்தில் இருந்தார். இதனையடுத்து மாவட்ட குறு, சிறு நடுத்தர தொழில்துறையின் தொழில் மையங்கள் மூலம் தொழில் தொடங்க விரும்புவோருக்கு ஏராளமான உதவிகளை செய்யப்படுவதை அறிந்தார் அஞ்சலை.

அஞ்சலைக்கு நெய்யப்படாத பைகள் தயாரிப்பதில் ஆர்வம் அதிகம். அவருக்கு ரூ.32 லட்சத்து 70 ஆயிரம் வங்கி கடன் பெற அரசின் குறு, சிறு நடுத்தர தொழில்துறை சார்பில் உதவி செய்யப்பட்டது. அந்த கடனில் 11 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை அஞ்சலிக்கு மானிய உதவியாக அரசு கொடுத்தது. எஞ்சிய கடன் தொகைக்கான வட்டியிலும் 6 சதவீதம் வட்டி தொகையை மானியமாக அரசு அளித்தது.

இந்த கடனை பெற்ற அஞ்சலை மகிழ்ச்சியாக தனது தொழிலை தொடங்கினார். என்னதான் பணம் கிடைத்தாலும் நம்பிக்கையே பெரும் பலமாக நினைத்து, அடுத்த அடியை எடுத்து வைத்து சாதித்துள்ளார். நெய்யப்படாத பைகள் தயாரிக்கும் சிறு தொழிலை தொடங்கினார் அஞ்சலை. அதில், 10 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த தொழில் மூலம் அஞ்சலைக்கு மாதம் ரூ.4 லட்சத்திற்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவருக்கு 10 ஊழியர்களின் சம்பளம் உட்பட செலவுகள் போக மாதம் ரூ.70 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த ஒரு பெண் தற்போது அரசின் உதவியால் முதலாளியாக உயர்ந்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com