அடுத்தடுத்து உயிரிழக்கும் சிவிங்கிபுலிகள்.. இந்தியாவில் அதிர்ச்சி!

சிவிங்கி புலி
சிவிங்கி புலி

மத்திய பிரதேசத்தில் இன்று மேலும் ஒரு சிவிங்கிப்புலி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1952-ம் ஆண்டிலேயே இந்தியாவில் அடியோடு அழிந்துபோன சிவிங்கிப் புலிகளை, மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியாக, கடந்த ஆண்டு நமீபியா நாட்டிலிருந்து 5 பெண், 3 ஆண் என மொத்தம் 8 சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்தது மத்திய அரசு. அவற்றை பிரதமர் மோடி தனது பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ தேசியப் பூங்காவில் திறந்துவிட்டார். அப்போது சிவிங்கிப் புலிகளுடன் மோடி நடத்திய போட்டோ ஷூட்தான் நாடு முழுக்கப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிலிருந்து மேலும் 12 சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன. மகிழ்ச்சிதரும் விஷயமாக, கடந்த மார்ச் 24-ம் தேதி ஜுவாலா என்ற பெண் சிவிங்கிப் புலி நான்கு குட்டிகளை ஈன்றெடுத்தது.

இப்படிக் கொண்டாட்டமாகக் கொண்டுவரப்பட்ட சிவிங்கிப் புலிகளும், அவற்றின் குட்டிகளும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துவரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, கடந்த மார்ச் 27-ம் தேதி சாஷா என்ற சிவிங்கிப் புலி சிறுநீரக பாதிப்பாலும், ஏப்ரல் 13-ம் தேதி உதய் என்ற ஆண் சிவிங்கிப் புலி மர்மமான முறையிலும் உயிரிழந்தன. அதையடுத்து மே 9-ம் தேதி மற்றொரு பெண் சிவிங்கிப் புலியும் காயம்பட்டு இறந்துபோனது. இந்த துக்கத்திலிருந்து மீள்வதற்குள்ளாக, புதிதாகப் பிறந்த நான்கு சிவிங்கிப் புலிக்குட்டிகளில் 3 குட்டிகள் அடுத்தடுத்த நாள்களில் உயிரிழந்திருக்கின்றன. இந்தக் குட்டிகள் உட்பட இதுவரை ஆறு சிவிங்கிப் புலிகள் உயிரிழந்திருக்கின்றன.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் குனோ பாலம்பூர் உயிரியல் பூங்காவிறிகு தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட சுராஜ் என்ற சிவிங்கிப்புலி இன்று பரிதாபமாக உயிரிழந்தது. சிவிங்கிப்புலியை மீட்ட வனத்துறை அதிகாரிகள், உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 5 மாதங்களில் 3 குட்டிகள் உட்பட 8 சிவிங்கிப்புலிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு சிவிங்கிப்புலிகள் எண்ணிக்கை 11ஆக சரிந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com