தங்க நகைகளுடன் எலும்புக்கூடு. அதிர்ந்துபோன ஆராய்ச்சியாளர்கள்.

தங்க நகைகளுடன் எலும்புக்கூடு. அதிர்ந்துபோன ஆராய்ச்சியாளர்கள்.
Published on

கிப்து நாட்டில் அமைந்துள்ள நெக்ரோபோலிஸ் கல்லறையானது உலகிலேயே மிகவும் பழமையான கல்லறையாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இவ்விடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், தங்க ஆபரணங்களோடு மிகப் பழமையான எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. 

இங்கே தங்க ஆபரணங்களுடன் எலும்புக்கூடுகள் கிடைப்பது ஒன்றும் புதியதல்ல. இதற்கு முன்னர் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் பல எலும்புக் கூடுகளும், தங்க ஆபரணங்களும் கிடைத்துள்ளன. இந்த கல்லறையின் கதையே சுவாரசியமாக இருக்கும். 

கிமு 4560 - 4450 முந்தைய இடமான இந்தக் கல்லறை, பல்கேரியா கடற்கரையில் அமைந்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட அளவு ஆராய்ச்சிகளில் 290க்கும் மேற்பட்ட கல்லறைகள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 3000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் தங்க நகைகள் கிடைத்துள்ளது. 1972 லேயே இங்கு ஒரு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதும் அதில் தங்க ஆபரணங்கள் கிடைத்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த நிகழ்வு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. மேலும் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பல கல்லறைகள் தோண்டி எடுக்கப்பட்டன. 

அதில் கல்லறை எண் 43 மட்டும் தனித்துவமானது. கார்பன் டேட்டிங் முறையைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில், இது 40 முதல் 45 வயதுடைய ஆணின் கல்லறையாக இருக்கலாம் என கண்டுபிடித்தனர். அந்த எலும்புக் கூட்டின் உயரம் 5 அடி 8 அங்குலம் இருந்தது. அதிலிருந்த பொருட்கள் ஒரு அரசனுக்கு சொந்தமானதாக இருக்கலாம். அங்கே கிடைத்த சில சான்றுகளின் அடிப்படையில், வர்ண கலாச்சாரம், மத்திய தரைக்கடல் மற்றும் தொலைதூர கருங்கடல் பகுதிகளில் இவர்கள் வர்த்தகம் செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அங்கிருந்து உப்பு ஏற்றுமதி செய்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளது. 

பின்னர் கல்லறை எண் 36 இல் இருந்து, கிரீடங்கள், காதணிகள், பெல்ட்டுகள், கழுத்தணிகள், வளையல்கள் உட்பட 850 தங்க பொருட்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அந்த கல்லறையிலிருந்து மட்டும் சுமார் ஒன்றரை கிலோ தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டது. அரசர்களால் மட்டுமே இவ்வளவு ஆபரணங்களை அந்தக் காலத்தில் அணிய முடியும் என்பதால், இதுவும் அரச கல்லறையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

இந்தப் பகுதி முழுவதையும்  ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். முழுமையான அகழ்வு பணிகளை மேற்கொண்டால், இங்கே இன்னும் பல கல்லறைகள் கண்டெடுக்கப்படலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com