இளமைக்காலத்தில் தூக்கம் தேவையில்லாதது.  மனம் திறந்த பில்கேட்ஸ்!

Sleep is unnecessary - Bill Gates.
Sleep is unnecessary - Bill Gates.
Published on

மீபத்தில் நடந்த ஒரு பாட்காஸ்ட் ஒன்றில் மைக்ரோசாப்ட் நிறுவனர்களின் ஒருவரான உலகப் பணக்காரர் பில்கேட்ஸ் தூக்கம் சார்ந்த தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். 

அந்த பாட்காஸ்டில் அவர் கூறிய கருத்துக்கள் அனைத்துமே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Unconfuse Me என்ற பாட்காஸ்ட் எபிசோடில் முதன்முறையாக பில்கேட்ஸ் பங்கேற்றார். அதில் மூளையின் ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களை பில்கேட்ஸ் பேசியுள்ளார். அதில் பில்கேட்ஸ் ஒரு பகுதியில், 

"நாங்கள் சிறுவயதில் தூக்கத்தைப் பற்றி இப்படித்தான் பேசிக் கொள்வோம். ஒருமுறை நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ஒருவர் ஆறு மணி நேரம் மட்டுமே தூங்குவேன் என்றார். மற்றொரு நண்பர் இல்லை நான் 5 மணி நேரம் தூங்குவேன், சில நேரங்களில் தூங்காமல் இருப்பேன் என்றார். மூன்றாவது நண்பர் நானும் பல நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன் என்று கூறினார். அப்போது என்னுடைய மைண்ட் வாய்ஸ், நானும் இவர்களைப் போல கொஞ்சமாவது தூங்க முயற்சிக்க வேண்டும் என சிந்திப்பேன். இப்படிதான் எங்களுடைய உரையாடல் இருக்கும். அந்த காலத்தில் தூக்கம் மனிதனுக்கு தேவையற்றது, அது ஒரு மனிதனை சோம்பேறியாக்கும் என நினைத்தேன். தூங்காமல் வேலை செய்ய அதிகமாக காபி குடிப்பேன். வேலையில் மும்முறமாக இருந்தால் தூக்கமே தேவையில்லை எனக் கருதினேன். 

ஆனால் காலம் செல்லச் செல்ல தூக்கமானது மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பது எனக்குப் புரிந்தது. எனது தந்தை அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு 2020ஆம் ஆண்டு இறந்தார். சரியான தூக்கம் இல்லாததும் இத்தகைய நோய்க்கு காரணமாக இருக்கிறது. இப்போதெல்லாம் நான் எவ்வளவு நேரம் தூங்குகிறேன் அது எந்த அளவுக்கு தரமாக இருக்கிறது என்பதை யெல்லாம் கண்காணிக்கத் தொடங்கிவிட்டேன். குறிப்பாக அனைவரும் டீன் ஏஜ் பருவத்தில் நன்றாக தூங்குவது முக்கியம். அது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியமானது"  என்று அந்த பாட்காஸ்டில் பில்கேட்ஸ் பேசியுள்ளார். 

இவரது கருத்தை ஒப்புக்கொண்ட பாட்காஸ்டில் பேசிய இன்னொரு நபர், "தற்போதிருக்கும் இளைஞர்களுக்கு தூங்காமல் இருப்பது ஏதோ சாதனை போல ஆகிவிட்டது. புகைப்பது உடலுக்கு கெடுதல் எனத் தெரிந்தும் புகைக்கிறார்கள். அதேபோல இரவில் நீண்ட நேரம் தூங்காமல் படம் பார்ப்பது, வெளியே செல்வது, கேம் விளையாடுவது எனத் தூங்காமல் இருப்பதையும் சாதனையாகப் பார்க்கின்றனர். இந்த நிலை முற்றிலுமாக மாற வேண்டும்" எனத் தெரிவித்தார். 

இப்படி அந்த பாட்காஸ்ட் முழுவதும் பல விஷயங்களை பில்கேட்ஸ் பகிர்ந்து கொண்டார். அதிலும் குறிப்பாக மனநிலைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் பேசியது அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com