இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய முதல் மூன்று வாரங்களில் 10 பேர் உயிரிழப்பு என்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளை முட்டியதில் 102 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழர்களுக்கு பொங்கல் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை ஜல்லிக்கட்டு வீரர்கள் பாய்ந்து சென்று அடங்குவார்கள். தமிழர்கள் காலச்சாரத்திலேயே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்துள்ளது. இடையே சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட போதும், மெரினாவில்
பெருந்திரளாகக் களத்தில் இறங்கிய தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் நடைபெறக் காரணமாக அமைந்தனர். தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப் பட விரும்பி வருகின்றனர் .
இத்தகைய ஜல்லிக்கட்டு விழாவில் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது வீரர்கள். மும்பையை சேர்ந்த எல்சா (ELSA) பவுண்டேசன் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு புதிய சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை காளைகள் முட்டியதில் 81 பார்வையாளர்கள், 21 மாடு பிடி வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய முதல் மூன்று வாரங்களில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இதற்கு பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாததே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், மஞ்சு விரட்டு, எருதாட்டம் ஆகிய போட்டிகள் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடத்தப் படுவதாக எல்சா பவுண்டேசன் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.