என்னது ....ரத்து செய்யப்பட்ட ரயில் கட்டணம் மூலம் இவ்வளவு லாபமா!

INDIAN RAILWAY
INDIAN RAILWAY
Published on

ரயில் பயணிகள் டிக்கெட் கட்டணமாக 2019-20 நிதியாண்டில் ரூ.352 கோடியும், 2020-21 நிதியாண்டில் ரூ. 299.17 கோடியும், 2021-22 நிதியாண்டில் ரூ.694.08 கோடியும், 2022-23 (டிசம்பர் மாதம் வரையில்) ரூ. 604.40 கோடியும் வசூலிப்பட்டுள்ளது

கடந்த 2014ம் ஆண்டு, ஐ.ஆர்.சி.டி.சியின் வலைதளத்தின் மூலம் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு இந்த (convenience fee) வசதி கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டது.

நெட் பேங்கிங்/டெபிட் கார்டு மூலம் முன்பதிவு செய்யும் ஏசி பெட்டிகளுக்கு 30 ரூபாயும், ஏசி அல்லாத பெட்டிகளுக்கு 15 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று, யுபிஐ மூலம் முன்பதிவு செய்யும் ஏசி பெட்டிகளுக்கு 20 ரூபாயும், ஏசி அல்லாத பெட்டிகளுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன.

பயணிகள் தவிர்க்க முடியாத சூழல்களில், முன்பதிவு செய்த ரயில் பயனங்களை ரத்து செய்து விடுகிகிறார்கள் . இவ்வாறு, ரத்து செய்யப்படும் பயணச் சீட்டுகளுக்கு, பல்வேறு வழிமுறைகளின் கீழ் அபராத கட்டணங்கள் பிடிக்கப்படுகிறது. உதாரணமாக, ரயில் பயணம் முன்பதிவு செய்த நேரத்தில் இருந்து 12-4 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்யப்பட்டால் குறைந்தது 50% கட்டணம் அபராதமாக வசூலிக்கப்பட்டு மீதமுள்ள தொகை நமது கணக்கிற்கு திரும்பச் செலுத்தப்படும்.

இவ்வாறு, ரத்து செய்யப்படும் ரயில்வே பயணச்சீட்டுகளின் கட்டணங்கள் குறித்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ரயில்வே அமைச்சர், " 2015 வருட ரயில்வே பயணச்சீட்டு விதிமுறைகளின்படி, ரத்து செய்யும் பயணங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஐஆர்சிடிசியின் வலைதளத்தின் மூலம் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு கூடுதலாக வசதிக் கட்டணம் (convenience fee) வசூலிக்கப்படுகிறது. ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டணம் திருப்பி தர மாட்டாது என்று தெரிவித்தார்.

2019-20 நிதியாண்டில் ரூ.352 கோடியும், 2020-21 நிதியாண்டில் ரூ. 299.17 கோடியும், 2021-22 நிதியாண்டில் ரூ.694.08 கோடியும், 2022-23 (டிசம்பர் மாதம் வரையில்) ரூ. 604.40 கோடியும் வசூலிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், ரத்து செய்யப்பட்ட காரணித்தினால் வசூலிக்கப்பட்ட தொகை குறித்த தரவுகளை அமைச்சர் தரவில்லை.

கடந்த 2014ம் ஆண்டு, ஐ.ஆர்.சி.டி.சியின் வலைதளத்தின் மூலம் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு இந்த வசதி கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டது. டிஜிட்டல் பேமென்ட் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்த கட்டணம் 2016ல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மீண்டும் இந்த கட்டணம் நடைமுறைக்கு வந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com