சூரியப் புயல் வரப்போகிறது. நாசா எச்சரிக்கை!

சூரியப் புயல் வரப்போகிறது. நாசா எச்சரிக்கை!
Published on

ரவிருக்கும் சூரியப் புயலின் தீவிர தாக்கத்தால், பூமியில் பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் இன்டர்நெட் இயங்காது என நாசா எச்சரித்துள்ளது. 

NASA எனப்படும் அமெரிக்காவின் 'நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன்' சூரியப் புயலின் தாக்கத்தால், ஏற்படவிருக்கும் இன்டர்நெட் தடைபடும் நிகழ்வான Internet Apocalypse-ஐ தடுக்கும் முயற்சிக்காக ஒரு விண்கலத்தை விண்ணில் ஏவியுள்ளனர். 

அமெரிக்க ஸ்பேஸ் ஏஜென்சியின் பார்க்கர் சோலார் ஆய்வின் மூலம், சூரியப் புயல் பூமியை கட்டாயம் தாக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை 'இன்டர்நெட் அப்போகாலிப்ஸ்' என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். கிட்டத்தட்ட அடுத்த 10 ஆண்டுகளில் பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நாசாவால் 2018ல் ஏவப்பட்ட விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் கொண்டு செல்லப்பட்டு, சூரியப் புயல் உருவாகும் பகுதிக்கு அருகிலேயே நிலைநிறுத்தப்பட்டு இந்த பார்க்கர் சோலார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

சூரியப் புயல் என்பது, கொரோனா எனப்படும் சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்திலிருந்து வெளிவரும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களின் வெளியேற்றமாகும். சூரியனுக்கு அருகில் கடுமையான வெப்பம் மற்றும் கதிர்வீச்சு இருந்தபோதிலும், இந்த ஆய்வில் சூரியனின் செயல்பாடுகள் பற்றிய முக்கியத் தகவல்களை விடாமுயற்சியுடன் சேகரிக்கப்பட்டு வந்தது.  இதன் முக்கியத்துவத்தை, ஆய்வின் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் 'ஸ்டூவர்ட் பேல்' முழுமையாக விளக்கினார். 

"காற்றினால் சூரியனிலிருந்து பல தகவல்கள் பூமிக்குக் கொண்டுவரப்படுகிறது. எனவே சூரியப் புயலின் பின்னால் உள்ள அறிவியல் மற்றும் முக்கியத்துவத்தை  நாம் அறிந்துகொள்வது முக்கியம். ஆனால் இந்தப் புயலால், சூரியன் ஆற்றலை எவ்வாறு வெளியிடுகிறது மற்றும் காந்தப் புயல்களை பூமி எப்படி எதிர்கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாதபடி இருக்கப் போகிறது. இவை நமது தகவல் தொடர்பு நெட்வொர்க்கு களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்த நிகழ்வால் மக்கள் இணைய சேவையை பல மாதங்களோ அல்லது பல ஆண்டுகளோ கூட இழக்க நேரிடலாம்" எனத் தெரிவித்துள்ளார். 

இதேபோல சூரியனில் நடக்கும் பல நிகழ்வுகளான சூரிய வெடிப்பு, அதிவேக சூரியப் புயல், சூரியனிலிருந்து வெளிவரும் ஆற்றல் துகள்கள் போன்ற அனைத்துமே சூரியனில் நடக்கும் செயல்பாட்டின் வடிவங்கள் என சொல்லப்படுகிறது. இதுபோன்ற அனைத்து சூரிய செயல்பாடுகளும் சூரியனிலுள்ள காந்தப்புலத்தால் இயக்கப்படுகிறது. 

வரவிருக்கும் சூரிய புயலால் ஏற்படும் தாக்கத்தை எப்படியாவது தடுத்துவிட வேண்டுமென நாசா விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com