ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை தினமாகக் கொண்டாடப் படுகிறது. அதையடுத்து இந்த வருடக் கடற்படை தினத்தைக் கொண்டாடுவதற்கான ஒத்திகையை இந்திய கடற்படை வீரர்கள் விசாகப்பட்டினத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971-ம் ஆண்டு நடந்த போரின் போது, டிசம்பர் 4 -ம் தேதி அதிகாலையில் இந்திய கடற்படையினர் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த போர்கப்பல்களை தாக்கி அழித்தனர்.
இந்திய கடற்படையின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் 1971-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் நினைவுகூரப் படுகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய கடற்படை தினத்தை கொண்டாடுவதற்கு கடற்படை வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை வீரர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையை நடத்தினர்.