வயநாட்டில் தற்காலிக இரும்பு பாலம் அமைத்த ராணுவ வீரர்கள்!

Bridge
Bridge
Published on

நாட்டை உலுக்கிய வயநாடு நிலச்சரிவில் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன. அந்தவகையில் தற்போது ராணுவ வீரர்கள் இரும்பு பாலம் ஒன்றை அமைத்துள்ளனர்.

கேரளாவின் வயநாடு நிலச்சரிவுதான், தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. வயநாடு பகுதியில் உள்ள அட்டமலை, முண்டக்கை, சூரல்மலை கிராமங்களில் ஜூலை 30ம் தேதி அதிகாலையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.கேரளாவில் நடந்த நிலச்சரிவின் முக்கிய காரணம், காலநிலை மாற்றம், காடுகள் அழிப்பு, நிலப்பரப்பில் ஏற்பட்ட விரிசல் போன்றவைதான் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி மொத்தம் 300 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்த இடத்திற்கு ராகுல்காந்தி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். 3வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்கின்றன. ராணுவ வீரர்கள், மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட சுமார் 3 ஆயிரம் பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்ணில் புதைந்தவர்களை மோப்ப நாய்கள் மூலம் தேடி வருகின்றனர். மண்ணில் புதைந்தவர்களை மீட்டெடுக்கும் பணியில் பல சவால்களை சந்தித்து வருகின்றனர் மீட்பு குழுவினர்.

குறிப்பாக இருவிழிஞ்சி ஆற்றைக் கடந்து ஆபத்தான நிலச்சரிவு பகுதிகளை கடக்கும் சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில்தான் அந்த ஆற்றின் குறுக்கே நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் இந்திய ராணுவ வீரர்கள் 200 பேர் தற்காலிக இரும்பு பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள்:
கேரளா நிலச்சரிவு: முன்னரே எச்சரித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்காதது ஏன்?
Bridge

கொட்டும் மழையையும் கண்டுக்கொள்ளாமல், பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இதனையடுத்து நேற்று மாலை 6 மணிக்கெல்லாம் பாலம் கட்டும் பணி முழுமையாக முடிந்தது. 36 மணி நேரமாக நடந்த இப்பணி முடிந்ததும், ராணுவ வாகனம் ஒன்று அதில் சோதனை செய்யப்பட்டது.

கனரக வாகனங்களும் பாலத்தில் செல்லலாம் என்பதால், மீட்பு பணிகள் விரைவாக நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அந்த பாலத்தை கட்டி முடித்த கையோடு, சேறு சகதிகளுடன் ராணுவ வீரர்கள் 'பாரத் மாதா கி ஜே' என்று முழக்கமிட்டனர். இந்தத் தருணம் இந்திய மக்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com