"இந்தியா எதையும் மறக்காது"...பஹல்காம் தாக்குதலின் ஓராண்டு நினைவு தினத்திற்கு இந்தியா ராணுவத்தின் போஸ்ட்..!

pahalgam attack
pahalgam attacksource:linkedin
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.இந்த துயரச் சம்பவத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, ராணுவம் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடக்கை மூலம் தக்க பாடம் புகட்டியது.

இந்த துயர சம்பவம் நிகழ்ந்து நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ''இந்தியா எதையும் மறக்காது '' என சமூக வலைதளத்தில் இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது. பதிவில், ''மனிதநேயத்தின் எல்லைகள் மீறப்படும்போது, ​​இந்தியாவின் பதில் மிகத்தீவிரமாகவும், கடுமையாகவும் இருக்கும். நீதி நிலைநாட்டப்பட்டது. இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது' என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் எவ்வித சமரசமும் கிடையாது என்று இந்திய ராணுவம் தெளிவுப்படுத்தி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com