நேஷ்னல் பென்சன் திட்டத்தில் சில மாற்றங்கள் அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட்டா?

நேஷ்னல் பென்சன் திட்டத்தில் சில மாற்றங்கள் அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட்டா?

பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் நேஷ்னல் பென்சன் திட்டத்தில் சில மாற்றங்களை செய்து பழைய பென்சன் திட்டத்தில் கிடைத்த படியே, அடிப்படை சம்பளத்தில் 50 சதவீத தொகைக்கு இணையாக ஓய்வூதியம் அளிக்கும் வகையில் மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த மாற்றங்கள் அரசு ஊழியர்களுக்கானது மட்டுமே, தனியார் ஊழியர்களுக்கு இந்த மாற்றங்கள் இருக்காது. மத்திய அரசு தற்போது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பென்சன் திட்டத்தை ஆய்வு செய்ய தனி குழுவை அமைத்தது. இந்த குழுவின் வாயிலாக பரிந்துரைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

மோடி தலைமையிலான மத்திய அரசு நேஷ்னல் பென்சன் திட்டத்தில் சில முக்கியமான மாற்றங்களை செய்ய இருக்கிறது.அதன் காரணமாக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது பெற்ற கடைசி சம்பளத்தில் 40 முதல் 45 சதவீத குறைந்தபட்ச தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என முயற்சியில் இறங்கியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்படி அனைத்து மாத சம்பளக்காரர்களும் இந்த திட்டம் கிடையாது. மாற்றங்கள் அரசு ஊழியர்களுக்கானது மட்டுமே, தனியார் ஊழியர்களுக்கு இந்த மாற்றங்கள் எதிரொலிக்காது. மேலும் ஓய்வூதிய தொகையை அதிகரிக்க வேண்டுமாயின் சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டில் மாற்றங்கள் செய்வது மூலம் கூடுதல் பென்சன் தொகை அளிக்கப்பட கூடும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து எச்ஆர்ஏ உயர்வும் இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போது எக்ஸ், ஒய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏ சம்பளம் தரப்படுகிறது.

இவை முறையே 27 சதவிகிதம், 18 சதவிகிதம், 9 சதவிகிதம் ஆகும். இந்த நிலையில்தான் இதில் எல்லா பிரிவிற்கும் தலா 2 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அகவிலைப்படி 50 சதவிகித்தை தொட்டால் மட்டுமே எச்.ஆர். ஏ உயர்த்தப்படும். ஆனால் இந்த முறை தேர்தலை மனதில் வைத்து அதற்கு முன்பே அகவிலைப்படி உயர்த்தப்படும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com