இனி திருமண விடுமுறை போன்று விவாகரத்துக்கும் விடுமுறை..!

மாதிரி படம்
மாதிரி படம்

திருமண விடுப்பு, பேறுகால விடுப்பு ஆகிய விடுமுறை பலன்களை கேள்விப்பட்டிருப்போம். தற்போது விவாகரத்துக்கான விடுமுறை வழங்கத் தொடங்கியிருக்கின்றன சில நிறுவனங்கள். உலகம் முழுக்க அண்மைகாலமாக விவாகரத்து அதிகரித்து வருவதை நாம் அறிவோம். இதனை காலக்கொடுமை என்று சிலர் புலம்புவதையும், ஆரோக்கியமான பரிணாமம்-தான் என சிலர் கூறுவதையும் பார்த்திருக்கலாம்.

ஆனால், விவாகரத்து நடைமுறைகளை மேற்கொள்வோர் பலர் மன ரீதியிலான சிக்கல்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது. இந்த சிக்கல்களை எதிர்கொள்ளவே, விவாகரத்துக்கான விடுமுறை வழங்க முன்வந்துள்ளன சில நிறுவனங்கள். விவாகரத்து நடைமுறைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தேவையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது, சட்ட நடைமுறைகளுக்கு ஏற்றவாறு அலுவலக நேரத்தை மாற்றிக் கொள்வது போன்ற பலன்கள் அளிக்கப்படுகின்றன.

சில நிறுவனங்கள் மனநல ஆலோசனை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளன. பிரியலாம் என முடிவெடுக்கும் தம்பதிகள், தங்களது பிள்ளைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களையும் இந்த நிறுவனங்கள் வழங்குகின்றன என்பது ஆச்சரிய தகவல். விவாகரத்து பெறுவதற்கான நடைமுறைகளின்போதும், விவாகரத்துக்கு பிறகும் பல மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் பணியாளர்கள், தங்களது பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் போவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழல் நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டே, விவாகரத்து கால விடுப்பு என்ற முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளன சில நிறுவனங்கள். தற்போதைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் இந்த விவாகரத்து விடுமுறையை அறிவித்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com