வீடு தேடி வந்த சோனியா காந்தி! மகிழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே!

சோனியா காந்தி - மல்லிகார்ஜுன கார்கே
சோனியா காந்தி - மல்லிகார்ஜுன கார்கே
Published on

காங்கிரஸ் தலைவராக தேர்வாகி உள்ள மல்லிகார்ஜுன கார்கேவை, புதுடில்லியில் உள்ள அவரது வீடு தேடி சென்று வாழ்த்து தெரிவித்த சோனியா காந்தி.

தேர்தல் முடிவுக்குப்பின், சோனியா இல்லத்துக்கு சென்று, அவரது வாழ்த்தைப் பெறு விரும்பினார் மல்லிகார்ஜுன கார்கே. ஆனால் சற்று நேரத்தில், புதுடில்லியின் ராஜாஜி மார்கில் உள்ள கார்கேவின் வீட்டுக்கே சோனியா சென்று வாழ்த்து தெரிவித்தார்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தவிர வேறு தலைவர்களின் இல்லத்துக்கு சோனிய இதுவரை சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'இனி அனைவரும் கார்கேவின் உத்தரவுபடி தான் நடக்க வேண்டும்; கட்சியில் என் பணி என்ன என்பதை கூட அவர் தா முடிவு செய்வார்' என, ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தேர்தல் வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 9,915 பேர் உள்ள நிலையில், தேர்தலின்போது மொத்தமாக 9,497 பேர் ஓட்டளித்தனர். பல்வேறு மாநிலங்களின் தலைமை அலுவலகங்களில், 87 இடங்களில் ஓட்டுச்சாவடிகளும், ஒற்றுமை யாத்திரை நடக்கும் பகுதியில் 50 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டு, ஒட்டுப்பதிவு நடந்தது. 416 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூரைக் காட்டிலும், பல மடங்கு ஓட்டுகளை அதிகம் பெற்று, மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, 80, வெற்றி பெற்றுள்ளார். இதன் வாயிலாக, 137 ஆண்டுகள் பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியில் , நேரு குடும்பத்தில் இல்லாத புதிய நபர் தேர்வு பெற்றிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் பெரியவர்கள், சின்னவர்கள் என யாரும் இல்லை. என்னை பொறுத்தவரை அனைவரும் சமம். கட்சியை வலுப்படுத்த உண்மையான காங்கிரஸ் வீரனாக செயல்படுவேன். ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் அச்சுறுத்தலாக திகழும் பாசிச சக்திகளை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com