காங்கிரஸ் கட்சி எம்.பி-யான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டு வரும் நடைபயணத்தில் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நாளை பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
-இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பாக தெரிவிக்கப் பட்டதாவது:
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பெயரில் மொத்தம் 150 நாட்கள் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ராகுல் காந்தி இன்று காலை மைசூரில் நடைபயணத்தில் தொடங்கி ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக மண்டியாவுக்கு நடைபயணம் செல்கிறார்.
ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தில் ஒருநாள் மட்டும் சோனியா காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி கலந்து கொள்கின்றனர். அதற்காக சோனியா மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு வரவுள்ளனர். அதையடுத்து வருகிற வியாழன் கிழமை (ஆக்டோபர் 6) அவர்கள் இருவரும் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்வார்கள்.
-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வருகையையொட்டி மைசூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.