கர்நாடகாவில் சோனியா காந்தி நடைபயணம்!

ராகுல் காந்தி நடைபயணம்
ராகுல் காந்தி நடைபயணம்

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று ராகுல் காந்தி கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்திலிருந்து தனது பாதயாத்திரையை தொடங்கியபோது, அவருடன் சோனியா காந்தியும் இணைந்து நடக்கத் துவங்கினார்.

 -இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

 காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை இலக்காக வைத்தும் ராகுல் காந்தி  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் கடந்த 7-ம் தேதி துவங்கிய இந்த நடைபயணம், 

கேரளாவில் 19 நாட்கள் பயணத்துக்குப் பின்பு, கர்நாடகாவில் மொத்தம் 21 நாட்கள் ராகுல் நடைபயணம் மேற்கொள்கிறார். கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் மைசூரு, மாண்டியா, ராய்ச்சூர் வழியாக தெலுங்கானா செல்கிறது.

 இந்நிலையில் தசரா கொண்டாட்டங்களுக்காக ராகுல் காந்தி தமது பயணத்தில் 2 நாட்கள் ஓய்வு எடுத்திருந்தார். அதன்பிறகு, இன்று காலை மாண்டியா மாவட்டத்திலிருந்து அவர் மீண்டும் தன் நடைபயணத்தைத் துவங்கியுள்ளார். 

இன்றைய நடைபயணத்தின்போது  ராகுல் காந்தியுடன் அவரது தாய் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியும் இணைந்து கொண்டுள்ளார்.

 -இவ்வாறு தெரிவிக்கப் பட்டது..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com