200 ஆவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய SpaceX!

200 ஆவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய SpaceX!
Published on

ட்விட்டர் நிறுவனத்தில் பல சர்ச்சைகளை எலான் மஸ்க் செய்துவந்தாழும் அவரது ஸ்பேசஸ் (SpaceX ) நிறுவனம் தனது சோதனைகளை சரியாக செய்து வருகிறது. 2022 இல் அடிக்கடி ஒரு செயற்கைகோள் சோதனை செய்து அடிக்கடி விண்ணிற்கு அவர்களது விண்கலம் சென்றது.

2022 ஆம் ஆண்டில் 61 வெற்றிகரமான ஏவுதல்களில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செயற்கைகோள்கள், சரக்குகள் அனுப்புதல், விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புதல், மற்றும் அவர்களின் ஆறு மாத காலப் பணியை முடித்து வெற்றிகரமாக திருப்பி அழைத்துவருவது என்று அனைத்து விதமான பணிகளையும் செய்து வந்தது.

வெற்றி , தோல்வி என்று எல்லாம் கலந்து இருந்தாலும் அதன் பாடங்களை நன்றாக கற்றுக் கொண்டனர். ஜனவரி 3 அன்று spacex நிறுவனம் தனது 200 ஆவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் உள்ள ஸ்பேஸ் லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 40 இலிருந்து ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட் மூலம் சுமார் 114 சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தப்பட்டது.

ஸ்மால்சாட் எனப்படும் சிறிய ரக செயல்களை ஏவுவதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஆறாவது ராக்கெட் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செயற்கைக்கோள்களை லோ எர்த் ஆர்பிட் எனப்படும் போமிகு அருகே உள்ள கீழ் அடுக்கில் செலுத்தியது. இதற்கு முன்னாள் ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்களை spacex நிறுவனம் விண்ணில் செலுத்தியது.

114 செயற்கைக்கோள்களில், சுமார் 36 செயற்கைகோள்கள் பூமியை கண்காணிக்கும் . அவை ஒரு மிக சிறிய அளவு மட்டுமே உள்ள செயற்கை கோள்கள் ஆகும். இந்த செயற்கைக் கோள்கள் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட பிளானட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com