"திமுகவினர் செய்த வேலையால் பிபி ஏறிடுச்சு – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சுவாரஸ்ய பேச்சு!

மருத்துவர் இல்லாமலேயே சிகிச்சை கிடைத்துவிட்டது; சட்டசபையில் ஜே.சி.டி. பிரபாகர் சுவாரஸ்ய உரை!
JCD Prabhakar
JCD
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

திமுகவினர் செயல்களால் எனது குறைந்த ரத்த அழுத்தம் சரியாகி, ரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத போதும், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின்பும் பேரவை ஆரோக்கியமாக நடக்க வேண்டும் என வந்திருப்பதாகக் கூறிய பேரவைத் தலைவர், குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட தனக்கு நேற்று திமுக நடந்துகொண்ட விதத்தால் மருத்துவரின் உதவி இல்லாமலேயே தனக்கு ரத்த அழுத்தம் சரியாகிவிட்டது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் தெரிவித்தார்.

காவல்துறை, மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்களின் மீது முதல்வர் விஜய் நேற்று பதிலுரை அளித்தார். அப்பொழுது முதலமைச்சர் விஜய் அவர்கள் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பதிலளிக்க அனுமதிக்கோரிய நிலையில் பேரவைத் தலைவர் அனுமதி தர மறுத்துவிட்டார். இதனால் திமுகவினர் நேற்று அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் தொடர்ந்து இன்றும், முதல்வர் நேற்றுப் பேசியதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் பேரவைத் தலைவர் இருக்கைக்கு முன்பாக திமுகவினர் ஒன்று திரண்டு கோஷமிட்டனர். இதையடுத்து திமுக உறுப்பினர்களை பேரவையிலிருந்து வெளியேற்றுவதற்கு பேரவைத் தலைவர் அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

அதைத் தொடர்ந்து பேசிய சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், ஞாயிற்றுக்கிழமை திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதாகக் கூறி ஓய்வெடுக்க அறிவுறுத்தினார். ஆனால் அதையும் மீறி நம்மை ஆளாக்கி அழகு பார்த்த முதல்வர் உரையை நேரடியாக கேட்க வேண்டும் என்று தான் அவைக்கு வந்தேன். நேற்று எதிர்க்கட்சியினர் நடந்து கொண்ட முறையைப் பார்த்ததில் மருத்துவர் இல்லாமலேயே சிகிச்சை கிடைத்துவிட்டது. BP எல்லாம் ஏறிவிட்டது. நல்ல வேலையாக எதிர்க்கட்சி தரப்பினர் நடந்து கொண்ட விதத்தில் மருத்துவர் இல்லாமலேயே தனக்கு சிகிச்சை கிடைத்து ரத்த அழுத்தம் சரியாகி விட்டது என்றவர், திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பதுதான் தான் செய்த தவறா என்று வேதனையுடனும் சற்று நகைச்சுவையுடனும் கேள்வி எழுப்பியுள்ளார். அவையின் மாண்பு தான் முக்கியம். திமுகவினரை வெளியேற்றியதைத் தவறாகக் கருதவில்லை என்று கூறிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது தான் நான் செய்த தவறா என்றும் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நல்லவேளையாக எதிர்க்கட்சியினர் நடந்து கொண்ட விதத்தில் மருத்துவர் உதவி இல்லாமலேயே தனக்கு சிகிச்சை கிடைத்துவிட்டது என்றும், ரத்த அழுத்தம் ஏறிவிட்டது என்றும் கூறியவர் இப்போது தன் மீது என்ன தவறு இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் பேசியதை நீக்க கோரிக்கை வைத்தார்கள். ஆனால் நீக்க முடியாது என்று தெளிவாக கூறியதாகவும், விதிகளுக்கு உட்பட்டு ஆதாரத்துடன் தான் முதல்வர் பேசியுள்ளார் என்றும் கூறியவர் மூத்த முன்னாள் அமைச்சர்கள், பேரவையை எப்படி மாண்புடன் நடத்த முடியும் என நன்கு அறிந்து கொண்டவர்களைக் கொண்ட கட்சியினர், அவையை நடத்த விடாமல் தடுத்தால் தன்னால் என்ன செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: "நாங்க வரல.. கூட்டணியிலும் இல்லை!" - தவெக-வை ஒரே போடாக போட்ட சிபிஎம்.!
JCD Prabhakar
logo
Kalki Online
kalkionline.com