தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைக்கு ஊருக்குப் போக சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு!

தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைக்கு ஊருக்குப் போக சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு!
Published on

மிழ் வருடப் பிறப்பு ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த வருடப் பிறப்பு வெள்ளிக்கிழமை வருவதால் அதற்கு அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாட்கள் என்பதால் சென்னை கோயம்பேட்டில் இருந்து வியாழக்கிழமை அன்று கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இது தவிர, இம்மாதம் 22ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இதற்காக ஏப்ரல் மாதம் 21ம் தேதி கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல 200 சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், ’தொடர் பண்டிகை விடுமுறை தினத்தை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி தமிழ் வருடப் பிறப்புக்கு 300 பேருந்துகளும் ரம்ஜான் பண்டிகைக்கு 200 பேருந்துகளும் என்று மொத்தம் 500 பேருந்துகள் கூடுதலாக இயக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்’ என்று தகவல் தெரிவித்தனர். மேலும், தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி 400 கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com