சென்னை மெட்ரோவில் பெண் பயணிகளுக்கு சிறப்பு உதவி மையம்!

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோவில் பெண் பயணிகளுக்கு சிறப்பு அவசர உதவி எண் கொண்ட உதவி மையம் தொடங்க முடிவு.

சென்னையின் மிக முக்கிய பிரதான போக்குவரத்தாக மெட்ரோ மாறி இருக்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் பொது போக்குவரத்தாக மாறி இருப்பதற்கு முக்கிய காரணம் விரைவான பயணம், பாதுகாப்பான சூழல், உள்கட்டமைப்பு ஆகும்.

இந்த நிலையில் மெட்ரோ நிர்வாகம் நடப்பாண்டி ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் மெட்ரோ பயணம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் பணியை தொடங்கியது. அதில் 12000 பெண் பயணிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர். இதில் பெரும் பாதியான பெண்கள் மெட்ரோவில் பாதுகாப்பு அம்சம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் பெண்களுக்கென்று தனி அவசர உதவி எண்ணை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் மக்களினுடைய கருத்தை நிறைவேற்றும் வகையில் பாதுகாப்பு அம்சத்தை மேலும் உயர்த்த முடிவு செய்து இருக்கிறது. இதற்காக நான்கு இலக்க எண் கொண்ட அவசர உதவி மையம் துவங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அவசர உதவி எண்ணில் இருந்து வினாடியில் தொடர்பு கொண்டு பெண்கள் பயன்பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சகத்திற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் கடிதம் எழுதி உள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நான்கு இலக்க அவசர உதவி எண் அனைத்து மெட்ரோ நிலையங்களுடன் இணைக்கப்பட்டு, அவசரக்கால அழைப்பாக அவை கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள பொது அவசர உதவி எண் 86042 515 15 என்ற எண் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com