தனியார் பள்ளிகளில் தாய்மொழி தமிழ் கற்றுத் தர சிறப்பு ஆசிரியர்கள்- அமைச்சர் அறிவுரை!

தனியார் பள்ளிகளில் தாய்மொழி தமிழ் கற்றுத் தர சிறப்பு ஆசிரியர்கள்- அமைச்சர் அறிவுரை!

ல்வியின் தரம் உயர உயர உலகமெங்கும் உலா வர உகந்த மொழியாக ஆங்கிலம் இருப்பதால் நம் தாய்மொழியின் சிறப்பை மறந்து தனியார் பள்ளிகளில் தமிழ்ப்பாடங்களின் மீதான ஆர்வம் குறைந்து விட்டது எனலாம். இரண்டாவது மொழியாக அனேகம்பேர் ஹிந்தியை தேர்வு செய்வதும் தமிழைக் கற்றுக் கொள்வதில் தடை எனலாம். இன்றைய கான்வென்ட் பிள்ளைகளிடம் தமிழில் பேசிப் புரியவைப்பது என்பது சவாலாகவே உள்ளது. தாய்மொழியை பிள்ளைகளின் பாடத்தில் சேர்க்க வேண்டும் என்பது தனியார் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோருக்கு விருப்பம். எனினும் பள்ளிகள் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமே? இதோ  “தனியார் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் நியமித்து தமிழ் கற்றுத் தர வேண்டும்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிய இந்த ஆலோசனை வரவேற்கத்தக்கது.


     கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று கோவை தடாகம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசுகையில் “குழந்தைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தெளிவாக வாசிக்க வேண்டும் என்பதற்காக ரெட் மாரத்தான் செயலி கொண்டுவரப்பட்டது. தனியார் பள்ளிகளில் நமது தாய்மொழியான தமிழ் மொழியை கற்றுத்தர சிறப்பு ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்” என்றார்.

    பின்னர் அமைச்சர் அளித்த பேட்டியில் “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின்  சி பி எஸ் இ பள்ளியாக இருந்தாலும் அங்கு தமிழ் கற்றுத் தரப்படுகிறதா என்பதை உறுதி செய்கிறோம். தாய் மொழியாம் தமிழ் மொழியை எழுத படிக்க எல்லா வசதியும் செய்து தர வேண்டும் என்ற முறையில் செயல்படுகிறோம். டெட் தேர்வு மத்திய அரசுடையது. இந்த தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான பிரச்சனையில் சங்கங்களை அழைத்து கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் விரைவில் சுமூக முடிவு எடுக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களின் விபரங்கள் வெளியானது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2018ல் தான் மாணவர்கள் விவரங்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது இனிமேல் தகவல்கள் வெளியாகாதபடி பார்த்துக் கொள்வோம்” என்றும் குறிப்பிட்டார் .

     மற்ற மொழிகளில் அதிக கவனம் செலுத்தும் பள்ளிகள் தாய்மொழியான தமிழை எழுதப் படிக்க வைப்பதிலும் கவனம் செலுத்தினால் பிழையற்ற தமிழை எதிர்காலத்தில் வாசிக்கும் பேற்றினைப் பெறலாம். தனியார் பள்ளிகள் செய்வார்களா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com