
ரயில் பயணத்தின் போது, பயணிகள் சிலர் டிக்கெட் இல்லாமல் அல்லது எடுக்காமல் முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருகின்றனர். இது, முன்பதிவு செய்து பயணிப்போருக்கு இடையூறாக உள்ளது. சில நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன.
இதற்கு தீர்வு காண, சிறப்பு சோதனைகள் நடத்த, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக, 50க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒவ்வொரு குழுவிலும், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் இடம் பெற்றிருப்பார்கள்.. இவர்கள், முன்பதிவு பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போருக்கு1000 ரூபாய் வரை அபராதமும் விதிக்க போகிறார்களாம்..
தெற்கு ரயில்வே அறிவித்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையானது பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது..