குடிமீள்தல் சிகிச்சையில் ஸ்பைடர்மேன் நட்சத்திரம் டாம் ஹாலண்ட்!

குடிமீள்தல் சிகிச்சையில் ஸ்பைடர்மேன் நட்சத்திரம் டாம் ஹாலண்ட்!
Published on

லக அளவிலான ஸ்பைடர்மேன் நட்சத்திரம் டாம் ஹாலண்ட், குடிமீள்தல் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். பாட்காஸ்ட் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரே இதைக் கூறியுள்ளார்.

குடிநோய்க்கு ஆட்பட்டதன் காரணமாக, அவரால் முன்னைப்போல திறம்பட நடிக்க இயலாத நிலை ஏற்பட்டது. அதையடுத்து ஓராண்டுக்கு படங்களில் நடிப்பதை அவர் நிறுத்திவைத்தார். கடைசியாக ஆப்பிள் டிவியின் தி கிரௌடட் ரூம் எனும் தொடரில் டாம் நடித்துவந்தார். அதையடுத்தே தன்னுடைய நடிப்பு இடைநிறுத்தம் பற்றி அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில், குடியிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டது பற்றி முதல் முறையாகப் பேசியுள்ளார். இந்தக் காலகட்டத்தில் டாம் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கு முன்னர் எதிர்கொண்டிராத ஓர் அனுபவத்தை சில உணர்ச்சிமயமான கட்டத்தைக் கடந்திருக்கிறேன் என்று டாம் பரவசப்படுகிறார்.

நட்சத்திரமான டாமுக்கு குடிமீள்தல் அவ்வளவு சாதாரணமானதாக இருந்திருக்க வில்லை. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மொடாக் குடிக்குப் பிறகே, குடியிலிருந்து மீளும் டாமின் முயற்சி தொடங்கியுள்ளது. ஒரு மாதம் கழித்து ஜனவரியில், எதைப் பற்றி நினைத்தாலும் குடிதான் முன்னால் வந்து நின்றது; உண்மையில் அந்த நிலைமை என்னை பீதியடைய வைத்தது. கொஞ்சமே கொஞ்சம் மது கிடைத்தாலும், எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்றுதான் என் எண்ணமாக இருந்தது.” என விவரிக்கிறார், டாம். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் குடியில்லாமல் கழிந்துவிட்டது, டாமுக்கு! என்றாலும் பிரிட்டனின் குடிகாரக் கலாச்சாரத்துக்குள் போகாமல் இருப்பது டாமுக்கு மிகவும் கடினமாக இருந்துள்ளது.

”என்னால் நாலு பேருடன் கலந்துகொள்ள முடியாது எனப் பட்டது. பப்புகளுக்குப் போய் ஒரு சோடாகூடக் குடிக்கமுடியாமல் இருந்தேன். இரவு விருந்துகளுக்கும் போக முடியாத நிலை. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நான் கடுமையான போராட்டத்தில் இருந்தேன். ஒரு கட்டத்தில் என்னை நானே கேட்டுக்கொண்டேன்: ஏன்.. ஏன் இப்படி குடிக்கு அடிமையாகிக் கிடக்கிறேன்? எப்போதுமே அதைவிட்டால் வேறு எதுவும் இல்லையென ஆகிவிட்டேனே?” என நடந்ததை விலாவாரியாக எடுத்துச்சொல்லும் டாமின் கதை, குடிநோயிலிருந்து மீள விரும்பும் அனைவருக்குமானதாக இருக்கிறது.

கேள்விகளைக் கேட்டதுடன் நின்றுவிடாமல் தனக்குத்தானே ஒரு காலக்கெடுவையும் டாம் விதித்துக்கொண்டார். ஆறு மாதங்களுக்கு குடிப்பதில்லை என்பது முதல் தீர்மானம். கடகடவென ஆறு மாதங்களும் கடந்துவிட்டன. கடந்த மாதம் முதல் தேதி தன்னுடைய 27ஆவது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார், டாம்.

டாமின் இந்த மீட்சிக்கு முக்கிய உதவியாக இருந்தவர், அவரின் தாயார்தான். அவரே டாமுக்கு முக்கியமான தூண்டுகோலாக இருந்திருக்கிறார். மேலும், ஸ்பைடர்மேன் படத்தில் உடன் நடித்த செண்டாயாவின் பங்கும் இதில் முக்கியமானது. செண்டாயாவைப் போல ஒருவர் தனக்குக் கிடைத்தது வாழ்வின் அரும்பேறு என அந்தப் பேட்டியில் டாம் ஹாலண்டு கூறியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com