3 அணிகளுக்குள் கடும் போட்டி - அரையிறுதிக்கு செல்லப்போவது எந்த அணிகள்?

3 அணிகளுக்குள் கடும் போட்டி - அரையிறுதிக்கு செல்லப்போவது எந்த அணிகள்?

கடந்த செவ்வாய் கிழமை நியூசிலாந்திற்கு எதிரான இங்கிலாந்தின் முக்கியமான வெற்றி, அவர்களின் அரையிறுதித் தகுதி நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதனால் , குரூப் 1 அணிகளுக்கிடையே ஆன இறுதிச் சுற்று ஆட்டம் சூடுபிடித்து உள்ளது.

மூன்று அணிகள் (நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) இப்போது ஐந்து புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. ஒவ்வொரு அணியும்  விளையாடுவதற்கு ஒரு போட்டி மீதம் உள்ள நிலையில், அரையிறுதிக்கு செல்ல அவர்களது நிகர ரன் விகிதம் முக்கிய பங்கு வகிக்கும்.  

அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பு யாருக்கு?

நியூசிலாந்தின் சிறந்த நிகர ரன் விகிதமான +2.233 அவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. அவர்களது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 89 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது மூலம் அவர்கள் குழுவில் முதலிடத்தில் உள்ளனர். தகுதிப் பந்தயத்தில் நியூசிலாந்தின் வாய்ப்பு இதனால் பிரகாசமாக உள்ளது.

நிகர  ரன் ரேட்  எந்த விதத்தில் முக்கியம்?

நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் தங்கள் இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றால், அவர்களது அரையிறுதி வாய்ப்பு நிகர ரன் ரேட்டை பொறுத்து அமையும்.

ஆஸ்திரேலியாவின் -0.304 ரன் ரேட் அவர்களுக்கு பலவீனம் என்றாலும், ஆரோன் ஃபின்ச்சின் அணி இங்கிலாந்துக்கு ஒரு நாள் முன்னதாக விளையாடுகிறது. எனவே வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றியை அதிக வித்தியாசத்தில் நிர்வகித்தால் அவர்களது ரன் ரேட்டை உயர்த்திவிட வாய்ப்புள்ளது.

அடுத்த நாள் விளையாடுவதால், சனிக்கிழமையன்று இலங்கையை எதிர்கொள்ளும் இங்கிலாந்து அணி தகுதி பெறுவதற்கு என்ன தேவை என்பதை சரியாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாடுவர்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (+0.547) மற்றும் நியூசிலாந்து (+2.233) அணிகளை ரன் ரேட்டில் பிடிக்கத் தவறினால், மற்ற இரண்டு அணிகள் இறுதிப் போட்டிகளில் எந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு அனுப்பப்படும் என்பதை அந்த இரு அணிகளும் அறிந்து கொள்ளலாம்.

எஞ்சிய போட்டிகள்

அயர்லாந்து vs நியூசிலாந்து - வெள்ளிக்கிழமை 04 நவம்பர், அடிலெய்ட் ஓவல்

நியூசிலாந்து இறுதிச் சுற்று ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் அயர்லாந்திற்கு எதிராக வெற்றிபெறுவதன் மூலம் அரையிறுதி இடத்தைப் பெற முடியும்.

ஒருவேளை அந்த ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றிபெற்றால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இலங்கை  அணிகளுக்கு கூட தகுதி இடங்களைப் பறிக்க வாய்ப்புகள் அமையும்.

ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் – வெள்ளிக்கிழமை 04 நவம்பர், அடிலெய்ட் ஓவல் 

அடிலெய்டில் வெள்ளிக்கிழமை நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால், அரையிறுதிக்கு செல்ல அவர்களுக்கு அதிக வாய்ப்பு ஏற்படும். எனவே அவர்கள் நிகர ரன் ரேட்டில் ஒரு பெரிய உயர்வு பெற அன்று முயற்சிப்பார்கள்.

இலங்கை vs இங்கிலாந்து - நவம்பர் 05 சனிக்கிழமை, SCG, சிட்னி

இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்குத் தேவையானதைத் தெரிந்துகொண்டு குரூப் 1 இன் இறுதி ஆட்டத்திற்குச் செல்லும். இது ஒரு வெற்றியாக இருக்கலாம் அல்லது நிகர ரன் விகிதத்தை பொறுத்து ஒரு குறிப்பிட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டி இருக்கலாம். ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து தமது போட்டிகளில் தோற்று இருந்தால் இலங்கையின் தகுதி நம்பிக்கை இன்னும் உயிருடன் இருக்கும்.

எது எப்படியோ, இந்த மும்முனைப் போட்டியானது உலகெங்கும் வாழும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனிய விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com