ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்

ஒரே ஓவரில் 7 சிக்ஸர்: ருதுராஜ் கெய்க்வாட் அபார சாதனை!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியின்  இறுதியில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து ருதுராஜ் கெய்க்வாட் சாதனை படைத்தார்.

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் உத்தர பிரதேச அணிக்கும் மகாராஷ்டிர அணிக்கும் இடையே நடந்தது. அதில் முதலாக களமிறங்கிய  மராட்டிய அணி, 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது.

அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியின் 49-வது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை ருதுராஜ் படைத்தார்.  அதாவது உத்தரப் பிரதேச அணியின் சிவா சிங் பந்து வீசிய அந்த ஒரு ஓவரில் நோ பால் உள்பட 7 பந்துகளில் 43 ரன்கள் அடித்து ருதுராஜ் சாதனை படைத்தார்.

மேலும் இந்த போட்டியில் ருதுராஜ் மொத்தம் 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் என்பது குறிப்பிடத் தக்கது.  

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com