முதல்முறையாக ஐபிஎல்-லில் காலடி எடுத்து வைக்கும் பிரபல அதிரடி பேட்ஸ்மேன்! எந்த அணிக்காக தெரியுமா?

முதல்முறையாக ஐபிஎல்-லில் காலடி எடுத்து வைக்கும் பிரபல அதிரடி பேட்ஸ்மேன்! எந்த அணிக்காக தெரியுமா?

டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளில் விளையாடியுள்ள, இங்கிலாந்தின் பிரபல அதிரடி பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதன்முதலாக ஐபிஎல் போட்டியில் களமிறங்க உள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட், இதுவரை 129 டெஸ்ட்களிலும், 158 ஒருநாள் போட்டிகளிலும், 32 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள நிலையில், இதுவரை அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை.

இந்நிலையில், இவர் இந்தமுறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால், இந்த சீசனில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக அவர் இதுவரை விளையாடாத நிலையில், தற்போது ராஜஸ்தான் அணிக்காக களமிறங்க உள்ளார்.

இந்நிலையில், அவரை வரவேற்கும் விதமாக, அவருடன் சுழல்பந்து வீச்சாளர் சாஹல் இருக்கும் புகைப்படத்தை அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தங்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

@rajasthanroyals (Twitter)
@rajasthanroyals (Twitter)

ஏற்கெனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்துவரும் நிலையில், தற்போது அதிரடி பேட்ஸ்மேன் ஜோ ரூட் அணியில் புதிதாக இடம்பெறவிருக்கிறார் என்ற செய்தி ராஜஸ்தான் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com