பிரபல கால்பந்து வீரரின் இன்ஸ்டா ஸ்டோரியில் இடம்பெற்ற அஜித்தின் 'வலிமை'!

பிரபல கால்பந்து வீரரின் இன்ஸ்டா ஸ்டோரியில் இடம்பெற்ற அஜித்தின் 'வலிமை'!

ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று கால்பந்து போட்டி. இந்த விளையாட்டுக்கு உலகளவில் ரசிகர் பட்டாளமும் ஏராளம்.

இந்நிலையில், 4 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தற்போது கத்தாரில் பிரமாண்டமாக துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் அர்ஜென்டினா, போர்ச்சுகல், பிரேசில் உள்ளிட்ட பலம் வாய்ந்த பல அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், உலகக் கோப்பை போட்டியில் நான்கு முறை கோப்பை வென்று பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் இத்தாலி, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்த உலகக் கோப்பை போட்டிக்குத் தேர்வாகவில்லை.

இந்நிலையில் இத்தாலி நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரரான Mario balotelli, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தல அஜித் நடித்து வெளியான 'வலிமை' படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றை ஸ்டோரியாக வைத்திருக்கிறார்.

இவர் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் இவ்வாறு வைத்திருப்பது, இத்தாலி நாட்டை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகக்கூட வைத்திருக்கலாம் என கால்பந்து ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com