பவர் பிளேயில் மிரட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்!
நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதிய நிலையில், மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்றைய போட்டி நடந்த நிலையில், டாஸை வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், மும்பை அணி பேட்டிங்கை துவக்கி விளையாடியது.
மும்பை அணியைப் பொறுத்தவரை, துவக்கம் முதலே வீரர்கள் அடித்து விளையாடிய நிலையில், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேமரூன் க்ரீன், அதிகபட்சமாக 40 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 64 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து ஹைதராபாத் அணி 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி, விளையாடியது. இதையடுத்து, மயங்க் அகர்வால், மார்க்ரம், கிளாஸன் மட்டுமே சற்று அடித்து விளையாடினர். இருந்தும் மும்பை இந்தியன் அணியின் பந்துவீச்சில், ஹைதராபாத் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 178 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று, தனது 2வது ஐபிஎல் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் களமிறங்கினார். அதைத்தொடர்ந்து, ஹைதராபாத் அணிக்கெதிராக 2.5 ஓவர்கள் பந்து வீசினார்.

அதிலும், பவர் பிளேயில் 2 ஓவர்களை வீசினார். பொதுவாக பவர் பிளேயில் ரன்களை கட்டுப்படுத்த முக்கியமான பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் நிலையில், அர்ஜுன் டெண்டுல்கர் அந்த வேலையை சிறப்பாக செய்து, 2 ஓவரில் வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் அந்த ஓவரில் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அடுத்து ஆட்டத்தின் கடைசி ஓவரை அவர் வீசிய நிலையில், அந்த ஓவரின் 5வது பந்தில் புவனேஷ்வர் குமாரை ஆட்டமிழக்கச் செய்து ஐபிஎல் முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இந்நிலையில் அவர் 2.5 ஓவரி பந்து வீசிய நிலையில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.