ஆஷஸ் கோப்பை: மார்னஸ், மிட்சல் அரை சதம் 600-வது விக்கெட்டை கைப்பற்றி பிராட் சாதனை!

ஆஷ்ஸ் கோப்பை
ஆஷ்ஸ் கோப்பை

ஷஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் நான்காவது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்திருந்த்து. இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 600-வது விக்கெட்டை கைப்பற்றியது இன்றைய ஆட்டத்தின் சிறப்பு அம்சiமாகும்.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அனுமதித்தது. ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் இங்கிலாந்து விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லாபுஸ்சாக்னே மற்றும் மிட்சல் மார்ஷ் இருவரும் நிதானமாக ஆடி தலா 51 ரன்கள் எடுத்தனர். இங்காலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரிஸ் வோக்ஸ் 18.5 ஓவர்கள் பந்து வீசி, 52 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராட் 68 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். டெஸ்ட் போட்டியில் 688 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்த ஆண்டர்சன் 17 ஓவர்கள் வீசி 43 ரன்களை கொடுத்த போதிலும் ஒரு விக்கெட்கூட கிடைக்காதது விரக்தியை ஏற்படுத்தியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் பிராட் வீசிய முதல் பந்தை வார்னர் பவுண்டரிக்கு அனுப்பினார். எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் குவாஜாவை எல்.பி.டபிள்யூ ஆக்கி 599 டெஸ்ட் விக்கெட்டை பெற்றார் ஸ்டூவர்ட் பிராட்.

டேவிட் வார்னர் 32 ரன்கள் எடுத்திருந்த போது வோக்ஸ் வீசிய பந்த விளாச முற்படுகையில் பாரிஸ்டோவிடம் காட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கத் தொடங்கினார். எனினும் 41 ரன்கள் எடுத்த நிலையில் வுட் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூவாகி அவுட்டானார்.

மார்னஸ் லபுஸ்சாக்னே 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரும் மொயீன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூவாகி அவுட்டானார்.முதல்நாள் ஆட்ட இறுதியில் மிட்செல் ஸ்டார்க் 23 ரன்களுடனும், கம்மின்ஸ் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை ஐந்தாவது வீர்ர் ஆவார் பிராட். இதற்கு முன் முத்தையா முரளீதரன் 800, வார்னே 708, ஆண்டர்சன் 688, கும்ப்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com