அணில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க நெருங்கும் அஸ்வின்! ஜடேஜா 3ம் இடத்திற்கு முன்னேற வாய்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் இந்திய பவுலர்கள் எடுத்த அதிக விக்கெட்டுகளின் அடிப்படையில், அனில் கும்ப்ளே 111 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கும் நிலையில், அதை முறியடிக்க ரவிச்சந்திரன் அஸ்வின் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். ஜடேஜா 3ம் இடத்திற்கு முன்னேறவும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, தற்போது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலம் வாய்ந்த அணிகளாகவே கருதப்படும் நிலையில், பல ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் மோதியதில் பல மறக்கமுடியாத சாதனைகளையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளனர்.
இரு அணிகளிலுமே பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சிலும் சரி ஜாம்பவான்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில், பந்துவீச்சாளர்களைப் பற்றி பார்க்கும்போது, டெஸ்ட் மேட்சைப் பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லையென்றால் டெஸ்ட்டில் வெற்றி பெறுவது கடினம்.
அந்த வகையில், இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, 20 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அதேபோல், தற்போதைய இந்திய அணியின் ஸ்டார் பவுலராக வலம் வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் 21 போட்டிகளில் விளையாடி 105 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், 2 டெஸ்ட் மற்றும் ஒரு இன்னிங்க்ஸ் முடிந்துள்ள நிலையில், இதுவரை 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அஸ்வின், ஏற்கெனவே ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத் தள்ளி 2ம் இடம் வந்த நிலையில், இன்னும் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 1 டெஸ்ட் மீதமுள்ள நிலையில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதன் மூலம் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து விடுவார்.
அதேபோல், ரவீந்திர ஜடேஜா தற்போது 18 போட்டிகளில் விளையாடி 84 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், இந்த தொடரில் மட்டும் இதுவரை 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார். இன்னும் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 1 டெஸ்ட் மீதமுள்ள நிலையில் இன்னும் 12 விக்கெட்டுகள் எடுக்கும்பட்சத்தில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி 3ம் இடத்திற்கு முன்னேறவும் வாய்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கெதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்களின் வரிசை :
