தென் கொரியாவை 3-2 என வீழ்த்தியது இந்தியா அணி!

indian hockey team
indian hockey team

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் இந்தியா, தென் கொரிய அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு செல்வதை உறுதி செய்வதுடன் 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஆட்டம் தொடங்கிய 6 வது நிமிடத்திலேயே இந்திய அணியின் நீலகண்ட சர்மா ஒரு கோல் போட்டார். சுக்ஜீத்சிங், சுமித்ஷம்ஷர் சிங் ஆகியோர் எடுத்துக் கொடுத்த பந்தை அழகாக கடத்திச் சென்று கோலுக்குள் தள்ளினார் நீலகண்ட சர்மா. எனினும் அடுத்த சில நிமிடங்களிலேயே கொரிய வீர்ர்  கிம் சுங்யுன் துரிதமாக பந்தை கடத்திச் சென்று கோல் போட்டார். இந்திய கோல் கீப்பர் கிருஷன் பகதூர் பதக் முயன்றும் பந்தை தடுக்க முடியவில்லை.

பின்னர் ஆட்டத்தின் 23 வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் போட்டார். இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. 53-வது நிமிடத்தில் இந்திய அணியி மன்தீப் சிங், பந்தை திறமையாக கடத்திச் சென்று ஒரு கோல் போட்டு தனது திறமையை நிலைநாட்டினார் (3-0).

ஆனாலும், ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் தென் கொரியாவின் யாங் ஜிஹுன் ஒரு கோல் போட்டார். அதன் பிறகு தென் கொரியா கோல் போடாதவாறு இந்தியா தற்காப்பாக விளையாடியது. இதையடுத்து 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா, தென் கொரியாவை வென்றது.

முன்னதாக ஜப்பானுக்கு எதிரான மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம் மலேசியாவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மலேசிய அணியில் நஜ்மி ஜஸ்லன், அஷ்ரன் ஹம்ஸனி மற்றும் ஷெல்லோ சில்வரிஸ் தலா ஒரு கோல் போட்டனர். ஜப்பான் சார்பில் அந்த அணியின் நிர்வா டகுமா ஆட்டத்தின் 59 வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். மலேசியா இதுவரை மூன்று போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து 9 புள்ளிகள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் – சீனா இடையிலான மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வென்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com